• February
    24
    Monday

Main Area

Main



பாஜகவை களட்டிவிட எப்பனு காத்துக்கிட்டு இருக்கோம்! அதிமுக அமைச்சர் ஓபன் டாக்! 

அமைச்சர் பாஸ்கரன்
அமைச்சர் பாஸ்கரன்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நடைபெற்ற எம்.ஜி. ஆர். நூற்றாண்டு வொழா மற்றும் உள்ளாட்சித்தேர்தல் வெற்றி விழா கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாஸ்கரன், “ பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல நேரத்தை எதிர்பார்க்கிறோம். அதிமுகவிலுள்ள நிறைய அமைச்சர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அமைச்சரவையில் எதிர்ப்பு தெரிவித்தோம். எனவே எப்போது வேண்டுமானாலும் அதிமுக பாஜகவிடமிருந்து விலகி செல்லும்” என பேசினார். 

 அமைச்சர் பாஸ்கரன்

கூட்டணி குறித்த கருத்துக்களை அதிமுகவினர் யாரும் பொதுவெளியில் கூறக் கூடாது என முதலமைச்சர், துணை முதலமைச்சர் கூறியிருக்கும் நிலையில் அமைச்சர் ஒருவர் இப்படி பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்பு தற்போதுதான் முடிந்துள்ள நிலையில் அதிமுக- பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.