• February
    28
    Friday

Main Area

Main



பெட்'டுக்குள்  துட்டு - தாத்தா ஆனார் பிணம் -பழைய படுக்கையில் கட்டுக்கட்டாக பணம் -'பெட்'டை வாங்கியவருக்கு அதிர்ஷ்டம் ..

howard-kirby
howard-kirby

மிச்சிகனை சேர்ந்த  ஒருவர், பழைய பொருள் விற்க்கும் கடையிலிருந்து வாங்கிய ஒரு படுக்கைக்குள், 43,000டாலர்  பதுக்கி வைத்திருப்பதைக் கண்டு, அதை உரிமையாளரிடம் திருப்பி கொடுத்தார்.

howard-kirby

மிச்சிகன் நகரைச் சேர்ந்த ஹோவர்ட் கிர்பி, ஓவோசோவில் உள்ள ஹ்யூமனிட்டி ரீ-ஸ்டோரிலிருந்து ஒரு பழைய  படுக்கையை வாங்கினார்..
அதை வாங்கி தூங்கியபோது  மெத்தை ஏன் வழக்கத்திற்கு மாறாக உறுதியாக இருக்கிறது  என்று அதை பிரித்து பார்க்க விரும்பி,   மெத்தையை  திறந்து பார்த்த போது, அதனுள் மொத்தமாக, 43,170 டாலர் உள்ளே ஒளித்து வைத்திருப்பதை  கண்டு திகைத்தார் .அதனால் அந்த பணத்தை பெட் வாங்கிய கடையில் ஒப்படைக்க முடிவு செய்தார். 

howard-kirby-01

'படுக்கையின் அசல் உரிமையாளர் யாரென்று சொல்ல முடியுமா' என்று கிர்பி கடைக்காரரிடம் கேட்டார்.
கடைக்காரர் அது  கிம் ஃபாத்-நியூபெரிக்கு என்பவரின் படுக்கை என்றதும் ,அவரிடம் இது பற்றி கேட்டபோது சமீபத்தில் இறந்த அவரின் தாத்தா பணத்தை அவர்களுக்கு தெரியாமல் அதில் பதுக்கி வைத்திருந்ததாகவும், அவர் இவ்வளவு பெரிய தொகையை பதுக்கி வைத்திருந்தது அவரது குடும்பத்தினருக்கு தெரியாது என்று அவர் கூறினார்.
எந்தபழைய பொருள் கடையும் அதை வாங்காமலிருந்தால் அவர்கள் முழு படுக்கையையும் எரித்திருப்பார்கள் என்று ஃபாத்-நியூபெர்ரி கூறினார்.கடைசியாக, 61 வயதான கிர்பி முழு பணத்தையும் இறந்த உரிமையாளரின் உறவினர்களிடம் திருப்பி கொடுத்துவிட்டார்.

2018 TopTamilNews. All rights reserved.