darbar
  • January
    23
    Thursday

Main Area

Main



நிரம்பியது மேட்டூர் அணை! கரையோர மக்களுக்கு பேராபத்து!!

Mettur Dam
Mettur Dam

மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்த ஆண்டு மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்புகிறது.

அதிகாலை 3 மணி அளவில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 மணிக்கு நிரம்பியது. இதையடுத்து 16 கண் மதகு பாலம் பகுதியில் உபரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால் கரையோரத்தில் வசிக்க கூடிய பொதுமக்களுக்கு வருவாய்த் துறையினர் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Mettur dam

கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக வடகிழக்கு பருவ மழை மற்றும் புயல் காரணமாக மழை பெய்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை முற்றிலுமாக குறைந்ததை அடுத்து மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி அளவிற்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அனைத்து வரக்கூடிய தண்ணீரின் அளவு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக இருப்பதாலும் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி அளவிற்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து நிரம்பியதாக வருவாய்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.