• August
    24
    Saturday

Main Area

இந்த விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களின் ஆணுறுப்பின் நீளம் அதிகமாக இருக்குமாம்!

சாமுத்திரிகா லட்சணம் என்பது நமது முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்ட அற்புதமான கலையாகும். இதன் மூலம் உடலில் உள்ள குறியீடுகளை வைத்தே அவர்களின் எதிர்காலம், ஆரோக்கியம், அவர்களுக்குள் இருக்கும் ரகசியங்கள் என அனைத்தையும் கண்டறிந்து விடலாம்.

நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது உண்மையான ஒன்றுதான். ஏனெனில் இதனை குறித்து இன்றும் அறிவியல் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சாமுத்திரிகா லட்சணத்தில் உடலின் ஒவ்வொரு பாகமும் முக்கிய இடத்தை வகிப்பதாகும்.

பெண்களுக்கு அவர்கள் உடலில் உள்ள மச்சங்கள், மச்சங்கள் இருக்கும் இடங்கள், பாதம் என அனைத்துமே அவர்களை பற்றி கூறுவதாக இருக்கும். ஆண்களை பொறுத்த வரையில் மச்சத்தை விட முக்கியமானது என்றால் அது விரல்கள்தான். ஏனெனில் ஒரு ஆணின் விரல்களே அவன் ஆரோக்கியம், ஒழுக்கம் போன்றவற்றை பற்றி கூறிவிடும். 

சாமுத்ரிகா லட்சணத்தை அடிப்படையாக கொண்டு உலகின் பல்வேறு மூலைகளிலும் பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் மூலம் பல உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளது என்னவெனில் ஆண்களின் விரலுக்கும், அவர்களின் ஆரோக்கியதிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கிட்டதட்ட இவர்கள் கூறுவதற்கும், சாமுத்திரிகா சாஸ்திரத்திரம் கூறுவதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

உங்கள் கையை நன்கு விரித்து பார்த்து உங்களின் விரல்களின் நீளத்தை பாருங்கள். அதுவே உங்களின் பாலியல் ஆரோக்கியத்தை பற்றி கூறிவிடும். பெண்களுடனான உறவு பல ஆண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் ஆண்களின் ஆள்க்காட்டி விரலானது மோதிர விரலை விட சிறியதாக இருந்தால் அவர்கள் பெண்களுடனான உறவில் சிறந்து விளங்குவார்களாம். ஆண்கள் கருவில் இருக்கும்போது ஏற்படும் பாலியல் ஹார்மோன் மாற்றங்களின் வெளிப்பாடு இதுவாகும். பாலியல் ஹார்மோனான டெஸ்டிஸ்ட்ரோன் அளவு அதிகமாக இருந்தால் ஆண்களின் மோதிர விரல் நீளமாக வளரும்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் மோதிர விரலானது ஆள்காட்டி விரலை விட பெரியதாக இருந்தால் அது ஆணுறுப்பு பெரியதாக இருப்பதற்கான அறிகுறி என்று கண்டறியப்பட்டுள்ளது. விரல்கள் இப்படி உள்ள ஆண்களின் ஆணுறுப்பானது விரைப்படைந்த நிலையில் பெரியதாக இருக்கும். ஆள்காட்டி விரல் எவ்வளவு சிறியதாக இருக்கிறதோ ஆணுறுப்பின் அளவு அவ்வளவு பெரியதாக இருக்கும். இதுவும் கருவில் இருக்கும்போது ஏற்படும் ஹார்மோன் விளைவுதான். 

இந்த ஆய்வில் மேலும் தெரிந்த தகவல் என்னவெனில் ஆள்காட்டி விரல் மோதிர விரலை விட சிறியதாக இருக்கும் ஆண்கள் பெரும்பாலும் வசீகரமான முகத்தை கொண்டிருப்பார்கள் என்று கூறுகிறது.ஆண் குழந்தை கருப்பையில் இருக்கும்போது அவர்கள் மீது ஏற்படும் அதிகளவு டெஸ்டிஸ்ட்ரோன் சுரப்பு அவர்களுக்கு வசீகரமான முகத்தை ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

ஆள்காட்டி விரல் நீளம் குறைவாக உள்ள ஆண்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்களாம். அமெரிக்காவில் ஆண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் அங்கு நடைபெறும் ஒரு கடினமான தேர்வில் வெற்றி பெற்ற பெரும்பாலான ஆண்களுக்கு மோதிர விரலை விட ஆள்காட்டி விரல் சிறியதாக இருப்பது கண்டறியப்பட்டது. விரல்கள் இப்படி உள்ளவர்கள் கணிதம் மற்றும் தர்க்க சிந்தனைகளில் சிறந்து விளங்குவார்கள்.

மோதிர விரலை விட ஆள்காட்டி விரல் நீளம் குறைவாக உள்ள ஆண்களுக்கு பல சாதகங்கள் இருந்தாலும் அவர்களுக்கு சில பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது. குறிப்பாக விரல் இப்படி உள்ள ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் ஆரோக்கியமான 3000 ஆண்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வில் மோதிர விரலும், ஆள்காட்டி விரலும் ஒரே நீளத்தில் இருக்கும் ஆண்களை விட ஆள்காட்டி விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு 33 சதவீதம் அதிகமாக உள்ளது என்னும் அதிர்ச்சிகரமான செய்தி தெரியவந்துள்ளது. ஆனால் ஆரோக்கியமான பழக்கங்கள் இருக்கும் ஆண்கள் இதனை நினைத்து பயப்பட வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

smprabu Thu, 02/14/2019 - 13:49
Mens world samuthrika latchanam Penis life style banana லைப்ஸ்டைல் ஆணுலகம்

English Title

Mens private part's length will be less if this finger's length is less

News Order

0 
உறவின்போது ஆணுறுப்பு சீக்கிரமா சுருங்கிடுதா? காரணம் இதுதான்

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு செயலிழப்பு பற்றி அமெரிக்க யூரோலஜிகல் அசோஸியேஷன் சில தகவல்களை கூறியுள்ளது. இந்த விறைப்பு செயல்பாடு என்பது நரம்பு, நரம்பியல், ஹார்மோன் மற்றும் உளவியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு ஏற்படுகிறது.

மருந்துகள், உடல் நல பிரச்சினைகள், காயங்கள், புகைப் பிடித்தல் போன்ற ஏராளமான காரணங்களால் இந்த விறைப்பு செயலிழப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இந்த நவீன கால பழக்க வழக்கங்களும் இந்த பிரச்சினைகளில் முக்கிய பங்காற்றுகிறது என்கிறார்கள். உங்களுக்கு விறைப்பு செயலிழப்பு இருக்கிறதா இல்லையா என்பதை மருத்துவரிடம் சென்று உறுதிப்படுத்தி கொள்ளலாம். கீழ்க்கண்ட காரணிகள் இந்த பிரச்சினைக்கு காரணமாக அமைகிறது. அவற்றைப் பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.

பொதுவாக ஆண்கள் வயதாகும் போது பாலியல் பிரச்னைக்கு ஆளாகிறார்கள். 1994-ஆம் ஆண்டு மாசேசூசெட்ஸ் ஆண் வயதாகுதல் பற்றிய ஆய்வின் படி 5-15% ஆண்மை இழப்பு கிட்டத்தட்ட 40-70 வயதில் ஏற்படுகிறது என்கின்றது. இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் விறைப்பு செயலிழப்பு மற்றும் பிற பாலியல் பிரச்சினைகள் இந்த வயதில் ஏற்படுவதில்லை. ஆனால் நாள்பட்ட பாலியல் பிரச்சினைகள் விறைப்பு செயலிழப்பிற்கு வழிவகுக்கும். பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடின்றி இருத்தல் கூட விறைப்பு செயலிழப்புக்கு வழிவகுக்கும். எனவே ஒரு ஆண் வயதாகும் போது தங்கள் உடல் நலத்தையும், மன நலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியம் என்கின்றனர்.

erect

சில மருந்துகள் ஆணுறுப்பில் உள்ள நரம்புகளை இடையூறு செய்து ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் அறிக்கையின்படி, சுமார் 25 சதவீத ஆண்களுக்கு இப்பிரச்னை ஏற்பட உட்கொள்ளும் மருந்துகளே காரணம் என்கின்றனர். அதிக ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்துக்காக சாப்பிடும் மருந்துகள் ஆண்களுக்கு விறைப்பு செயலிழப்பை ஏற்படுத்துகிறதாம். எனவே இந்த மருந்துகளை நீண்ட காலம் சாப்பிட்டு வரும் போது ஆண்மை இழப்பு ஏற்படும். எனவே உங்கள் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசித்து செயல்படுவது நல்லது.

ஆண்மை இழப்பை ஏற்படுத்தும் மருந்துகள் புற்றுநோய் கீமோதெரபி :மைலார்ன் மற்றும் சைடோசன் புற்றுநோய் சிகிச்சையில் இடுப்புக்கு கீழே ஏற்படும் கதிரியக்க பாதிப்பால் விறைப்பு செயலிழப்பு ஏற்படுதல்.

மைக்ரோசைடு(ஹைட்ரோகுளோரோதயசைடு) பீட்டா - ப்ளாக்கர்ஸ், இண்ட்ரல்XL (ப்ரோபிரானோல்) ஆன்டி அனிஸ்சிட்டி மருந்துகள், பாஸில் (பரோக்ஸ்டைன்), மன அழுத்த மருந்துகள் (ஷோலோவ்ட்), ஆன்டி ஸ்கோரோஃப்ரெனியாமருந்துகள் (செரோக்வெல் (குயிடீபைன்)) வாலீம் (டயஸெபம்) புரோஸ்டேட் புற்றுநோய்க்கான ஹார்மோன் மருந்துகள் எலியக்சின் (புளூட்டமைட்) மற்றும் லுப்ரோன் (லுபுரோலிடு) புரோசிசியா (ஃபைனான்ஸ்டைட்), இது புரோஸ்டேட் பெரிதாகுதல் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் முடி இழப்பிற்கு பயன்படும் மருந்துகள் அல்சர் மருந்துகளான ஹிஸ்டமைன் H2- ஏற்பு எதிர்ப்பாளர்களான டாக்மட் (சிமெடிடின்) மற்றும் சாந்தாக் (ரனிடிடின்) பெனட்ரைல் (டிஃபென்ஹைட்ரமைன்) மற்றும் விஸ்டரைல் (ஹைட்ராக்ஸ்சின்) போன்ற ஒவ்வாமைகளைக் கையாளுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆன்டிஹிஸ்டமைன் மருந்துகள். நிஜோரல் (கெட்டோகொனசோல்) போன்ற பூஞ்சை தொற்றுக்கான ஆன்டிபாயாடிக் மருந்துகள். ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் நாப்ராக்ஸன் போன்றவற்றை அடிக்கடி எடுத்து வருதல். மேற்கண்ட மருந்துகள், சிகச்சைகள் விறைப்பு செயலிழப்பை ஏற்படுத்தி விடுகிறது. MOST READ: உறவின்போது விந்து உள்ளே செல்லும்முன் உறுப்பை எடுத்துவிட்டால் கர்ப்பம் உண்டாகுமா? ஆகாதா? குட்டிப் பையன் பிலேகானுக்கு உடனடி கேன்சர் சிகிச்சை அவசியம்.

erection

சிகிச்சைகள் இடுப்பு பகுதியில் செய்யும் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் நரம்பு பாதிப்பு, ரத்த நாளங்கள் பாதிப்பு போன்றவை கூட விறைப்பு செயலிழப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதே மாதிரி புரோஸ்டேட் புற்றுநோயின் போது செய்யும் அறுவை சிகிச்சையும் ஆண்மை இழப்பை உண்டாக்கும் அபாயம் உள்ளது. குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சையின் புற்று நோய் கட்டியோடு குடல் பகுதியை நீக்குவதும் ஆண்மை இழப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இடது ஹெமிகோலெக்டோமி (பெருங்குடலின் இடது பகுதியை அகற்றுவது) அடிவயிற்றில் சிகச்சை (மலக்குடல் வெளிதோல் அகற்றுதல்) ப்ரோடொக்டோமி (மலக்குடல் அகற்றுதல்) குடல் அறுவை சிகிச்சையின் போது சரும உணர்திறன் இழப்பு ஏற்படுகிறது. அதாவது இடுப்பு பகுதியை கட்டுப்படுத்தும் நரம்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த மாதிரியான அறுவை சிகிச்சைகள் இறுதியில் ஆண்மை இழப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

காயங்கள் நரம்புகள், தமனிகள் மற்றும் இடுப்பு நரம்புகள் போன்றவற்றில் ஏற்படும் காயங்கள் செக்ஸூவல் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன. ஆண்களுக்கு ஏற்படும் முதுகுத்தண்டு காயம் போன்றவை தாம்பத்தியத்தில் இன்பம் இல்லாமல் இருத்தல், விறைப்பு செயலிழப்பு போன்றவற்றிற்கு காரணமாக அமைகிறது.

erect

டயாபெட்டீஸ் மற்றும் இதய நோய்கள் டைப் 1&2 டயாபெட்டீஸ் நோய்கள் கூட ஆண்களுக்கு விறைப்பு செயலிழப்பை ஏற்படுத்தி விடுமாம். 2017 ஆம் ஆண்டு டயாபெட்டீஸ் மெடிசன் என்ற தகவலின் படி பாதிக்கு மேற்பட்ட டயாபெட்டீஸ் ஆண்கள் இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர் என்று எச்சரிக்கை ரிப்போர்ட் அளிக்கிறது. ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும் போது ஆணுறுப்பின் இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கின்றன.

இதே மாதிரி இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்றவையும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கரோனரி தமனி நோயும் டயாபெட்டீஸ் மாதிரி ஆணுறுப்பின் செயல்பாட்டை குறைப்பதில் முக்கிய இடம் வகிக்கிறது. உயர் ரத்த அழுத்தம் விறைப்பு தன்மை என்பது ஆணுறுப்பில் பாயும் இரத்த ஓட்டத்தை பொருத்து அமைகிறது. எனவே உயர் ரத்த அழுத்தம் ஆணுறுப்பில் உளள சிறிய ரத்த நாளங்களை சிதைவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் தடைபட்டு அங்கே விறைப்பு செயலிழப்பை உண்டாக்கிறது என்கின்றனர். ஹார்மோன் உற்பத்தி குறைதல் உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஹார்மோன் மாற்றத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. இதனால் விந்தணு க்களின் எண்ணிக்கை குறைதல், டெஸ்டிரோடிரோன் ஹார்மோன் மாற்றம் போன்றவற்றை ஆண்கள் சந்திக்கின்றனர். 

erect

நைட்ரிக் ஆக்ஸைடு குறைதல் நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் ரத்த குழாய்களை ரிலாக்ஸ் செய்ய போதுமான நைட்ரிக் ஆக்ஸைடு இல்லாமல் ஆக்கி விடுகிறது. இதனா‌ல் ஆணுறுப்பில் உள்ள இரத்த குழாய்கள் பாதிப்படைந்து ஆண்மை இழப்பு ஏற்படும். இரத்த குழாய் கசிவு சில ஆராய்ச்சிகளின் படி உயர் இரத்த அழுத்தத்தின் போது ஆணுறுப்பில் இரத்தம் அதிக வேகமாக இரத்த குழாய்களில் பாயும் போது இரத்த குழாய் வால்வுகள் திறந்து மூடுவதில் சிரமம் ஏற்படுகிறது. உளவியல் காரணங்கள் மன அழுத்தம், மன உளைச்சல் சீர்கேடு, கவலை போன்றவையும் விறைப்பு செயலிழப்பிற்குக் காரணமாக அமைகின்றன. இந்த உளவியல் காரணங்கள் மட்டுமின்றி இன்னும் பல்வேறு காரணங்களும் இருக்கின்றன. 

அதில் சில உங்களுக்குப் புதிதாகவும் சில ஏற்கனவே கேள்விப்பட்டதாகவும் இருக்கும். அதுபற்றி இங்கே பார்க்கலாம். இதர காரணங்கள் சிறுநீரக மற்றும் சிறுநீரக பாதை பாதிப்பு சிறுநீரக பாதை தொற்று, சிறுநீரக உறுப்பு பாதிப்பு போன்றவை ஆண்மை இழப்பை ஏற்படுத்தும் பர்கின்சர் நோய், எபிலப்சி, பக்கவாதம், ஸ்கெலரஸிஸ், மூளை நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக அமைகிறது அப்ஸ்டக்டிவ் ஸ்லீப் அனிமியா நேஷனல் ஸ்லீப் பவுண்டேஷன் யின் 20 11 ஆம் ஆண்டு தகவல் படி யூயார்க் நகரில் உள்ள சினாய் மருத்துவ மையம், ஸ்லீப் அனிமியாவும் விறைப்பு செயலிழப்பிற்கு ஒரு காரணமாக அமைகிறது. வாழ்க்கை பழக்க வழக்கங்கள் பொழுதுபோக்கு மருந்துகள் ஆல்கஹால் புகைத்தல், நிக்கோடின், புகைப் பழக்கம் டெக்சாடெரின் (டெக்ஸ்ட்ரம்பேட்டமைமைன்) போன்ற ஆம்பெட்டமைன்கள் பினோபார்பிடல் போன்ற பார்பிட்யூரேட்ஸ் கோக்கைன் மரிஜூனா மெத்டோன் ஹீரோயின் மற்றும் ஒக்ஸிகோனின் போன்ற ஓபியன்கள்.

cycle

சைக்கிள் ஓட்டுப் போது ஆணுறுப்பில் உண்டாகும் அதிகமான அழுத்தம் அந்த பகுதியில் காயங்களை ஏற்படுத்தி விறைப்பு பிரச்னை உண்டாக்குகிறது. அதிக நேரம் பைக் ஒட்டுவது, 24 மணி நேரமும் ஓட்டுதல், பயண ஓட்டுனர் தொழில் புரிபவர்கள் இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர். 40-70 வயதை அடைந்த கிட்டத்தட்ட 1700 ஆண்கள், வாரத்துக்கு 3 மணி நேரம் சைக்கிள் ஓட்டினாலே ரத்த குழாய் அடைப்பு மற்றும் ஆணுறுப்பில் பாதிப்பை சந்திக்கின்றனர் என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இதில் பைக் சீட் அமைப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. அமர்ந்து ஓட்ட ஏதுவாக சீட் அமைப்பு இருக்க வேண்டும். அகலமான சீட் அமைப்பு ஆணுறுப்பில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

smprabu Thu, 01/24/2019 - 15:21
Intercourse, Sex erectyle dysfunction erectyledysfunction. லைப்ஸ்டைல் ஆணுலகம்

English Title

Reason for erectyle dysfunction

News Order

0
sperms

உடல் சூட்டை 2 நிமிடங்களில் தணிக்க இதோ வழி- விந்தை விருத்தியாக்கும் சித்தர்களின் சூப்பர் ஃபார்மூலா!

சித்தர்கள் நீண்டகாலத்துக்கு முன்பே வகுத்துத் தந்த ஓர் எளிய வழிமுறையை இங்கு அறிந்து கொள்ளலாம். இதில் பலன் பெறுவதற்கு இரண்டே நிமிடங்கள் போதும்.

ஆண்களின் 'அந்த' பழக்கத்தால் தாம்பத்தியத்துக்கு நல்லதா? கெட்டதா?

சுயஇன்பத்துக்காக தமது அந்தரங்க உறுப்பை தீண்டுவது முற்றிலும் இயற்கையானதே என மருத்துவர்கள் கூறுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் சுயஇன்பப் பழக்கத்தால் உடலுக்கு  பல்வேறு நன்மைகள் விளைவதாகவும் கூறியுள்ளனர்.

எந்த வயதிலும் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் சுயஇன்பப் பழக்கத்தில் ஈடுபடுகின்றனர். பருவம் எட்டுவதற்கு முன்பே சிறுவர் அல்லது சிறுமியரும் தமது அந்தரங்க உறுப்பை தேய்பதை சில நேரங்களில் நாம் கவனிக்கலாம். பருவ வயதை எட்டும்போது குழந்தைகளுக்கு சுயஇன்பம் என்பது முற்றிலும் இயற்கையான விஷயம் என்றும் அதை தனிமையில் மட்டுமே அனுபவிக்க வேண்டும் எனச் சொல்லித் தரவேண்டியது பெற்றோரின் இன்றியமையாத கடமையாகும்.

பெரும்பாலானோர் இந்தப் பழக்கத்தில் தினமும் ஈடுபடுகின்றனர். இது பற்றி வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முன்வராவிட்டாலும் வயது வித்தியாசமின்றி ஆணும் பெண்ணும் சுயஇன்பத்தில் ஈடுபடத்தான் செய்கின்றனர்.

சுயஇன்பப்பழக்கம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சிலர் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள செய்கின்றனர். வேறு சிலர் தங்களது உடலைப் புரிந்து கொள்ள செய்கின்றனர். சிலர் தங்களது செக்ஸ் வேட்கையைத் தணித்துக் கொள்ள ஈடுபடுகின்றனர். துணை இல்லாத சமயத்தில் சுயஇன்பம் செய்பவர்களும் உண்டு. ஆனால் உண்மையில் பெரும்பாலோனோர் சுயஇன்பத்தில் ஈடுபடுவதற்குக் காரணம் அதில் அவர்களுக்கு முழு சுகம் கிடைப்பதுதான். திருமணம் செய்யாமல் தனித்து வாழ்பவர்கள்தான் சுயஇன்பத்தில் ஈடுபடுகின்றனர் எனச் சிலர் நினைப்பதுண்டு. மாறாக, திருமணம் ஆன தம்பதிகளும், தனிமையில் வாழ்பவர்களும் இதில் ஈடுபடுகின்றனர்.

சிலர் அடிக்கடி செய்வர். ஒருசிலர் அவ்வப்போது செய்வர். சிலர் இதைச் செய்வதே இல்லை. மனதளவிலும் உடலளவிலும் சுயஇன்பப் பழக்கத்தால் நன்மைதான் ஏற்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான பாலுறவு ஆகும். தவறான பாதையில் சென்றுவிட்டாலோ பால்வினை நோய்களுக்கு ஆளாகுதலோ அல்லது கருவுரும் வாய்ப்போ நிகழலாம்.

சுயஇன்பப் பழக்கத்தில் உச்சக்கட்டத்தை எட்டும்போது உடலில் இருந்து எண்டோர்பின்ஸ் எனும் ஹார்மோன் சுரக்கிறது. இதனால் உடல் வலி குறைந்து சுகமாக உணர முடியும். உச்சக்கட்டத்தை இதில் அடைவதால் பார்ட்னருடனோ அல்லது தனியாகவோ பாலுறவில் ஈடுபடுவதால் உடல் வலி நீங்கும்.

பிற நன்மைகள்:

**பாலுறவு வேட்கை குறையும்.

**மனஅழுத்தத்தைக் குறைக்கும்.

**நல்ல தூக்கத்துக்கு வழி வகுக்கும்.

**தன்னம்பிக்கை கூடும். உடல் பொலிவுறும்.

**பாலுறவுப் பிரச்னைகளைக்குறைக்க வழி வகுக்கும்.

**மாதவிலக்கு சமயங்களில் ஏற்படும் தசைப்பிடிப்பு, தசைவலி குறையும்.

**அடிவயிறு மற்றும் இடுப்புப்பகுதி தசைகள் வலுவடையும்.

பாலுறவில் சுயஇன்பம் மிக முக்கியமானதாகும். இதன்மூலம் பாலுறவின்போது உங்கள் உடல் எப்படி இயங்கவேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். எந்த இடத்தில் தொடவேண்டும். எவ்வளவு அழுத்தம் தந்தால் சுகமாக இருக்கும், வேகமாக இயங்குவதா, மென்மையாக இயங்குவதா, தனக்குத்தானே உச்சக்கட்டத்தை எட்டுவதற்கும், துணையுடன் உச்சக்கட்டத்தை எட்டுவதற்கு உரிய வழிமுறையை அறியலாம்.

சிலர் தினசரி, ஒரு நாளில் பலமுறை, வாரம் ஒரு முறையோ சில முறையோ அல்லது மாதம் ஒருமுறை, சில வாரங்களுக்கு ஒருமுறை, எப்போவாவது ஒரு முறை என பல்வேறாக சுயஇன்பத்தை அனுபவிக்கின்றனர். சிலர் இதை செய்யவே மாட்டார்கள்.எதுவும் தப்பில்லை. எல்லாமே இயற்கையானதாகும்.

பார்க்கும் வேலையை, பொறுப்பை, சமுக வாழ்வை புறந்தள்ளிவிட்டு சுயஇன்பத்தில் ஈடுபட்டால் அது அளவுக்கு மீறிய பழக்கம் எனலாம். இது போன்ற பிரச்னை இருப்பவர்கள் மனநல ஆலோசகர் அல்லது மருத்துவ நிபுணர் ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகிறது.

smprabu Thu, 01/17/2019 - 18:29
masturbation Mens world Lifestyle Men health menalone லைப்ஸ்டைல் ஆணுலகம்

English Title

Benefits of masturbation

News Order

0 
lovee

நீங்க விரும்பும் பொண்ணு உங்கள லவ் பண்றாங்களா இல்லையான்னு தெரிஞ்சிக்கணுமா?

காதல் விஷயத்தில் கண்கள் எப்போதும் பொய் சொல்வதேயில்லை. பெண்கள் பொதுவாகவே தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக வெளியில் சொல்வதில்லை.

2018 TopTamilNews. All rights reserved.