• August
    24
    Saturday

Main Area

medicinal use
எலும்புகளை உறுதியாக்கும்

உருவத்தில் சிறியதாக இருப்பதால் நாம் சமையலில் எள்ளுக்கு அதிக முக்கியத்துவம் தர்றதில்லை. சமைக்கும் போது தாளிக்க கடுகு பயன்படுத்துகிறோம். அதே அளவிற்கான எள்ளை தினமும் உட்கொண்டு வர வேண்டும். நாம் எல்லாம் சிறு வயதில் எள் உருண்டை சாப்பிட்டு இருக்கிறோம். அதனால எள்ளில் இருக்கும் சக்திகள் நமக்கு கிடைத்து வந்தது. ஆனால், நம் பிள்ளைகளுக்கு எள்ளு உருண்டையும், கடலை மிட்டாயுமா சாப்பிட வாங்கித் தர்றோம்?

ell

உணவில் எள் சேர்த்து சமைக்கும் பழக்கம் நெடுங்காலமாகவே தமிழர்களிடையே இருந்து வந்திருக்கிறது. உடல் உறுதியையும்,  ரத்தத்தை பெருக்கக் கூடிய ஆற்றலும் எள்ளுக்கு உண்டு. கண்களுக்கு ஒளியைக் கொடுப்பதுடன், வயிற்றுப் புண்களை ஆற்றக் கூடிய சக்தியும் எள்ளுக்கு உண்டு. பெண்களுக்கு கர்ப்ப பையை பலபடுத்தக் கூடிய வரப்பிரசாதம் எள். தாய்ப்பாலை பெருக்க கூடிய பொருளாகவும் எள் இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு தசை,எலும்பு,மூளை இனப்பெருக்க உறுப்பு மண்டலம் என அனைத்தையும் பாதுகாத்து, பலம் தரும்.
எள்ளிலிருந்து கிடைக்கும் நல்லெண்ணெயை பயன்படுத்தினால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். நல்லெண்ணெய் அதிக பலன்களைத் தருவதால் தான் அதை நல்ல எண்ணெய் என்கிறோம். எள்ளை சாப்பிடுவதாலும், நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதாலும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு  பல நன்மைகள் உண்டாகிறது.

ellu

எள் ஒரு பங்கு, சீரகம் அரை பங்கு, அலிசி விதை (ப்ளாக் சீட்ஸ்) கால் பங்கு என சேர்த்து, ஒன்றாகப் பொடித்து இளம் வறுப்பாக வறுத்து தனியாகவோ அல்லது பனைவெல்லம்  கலந்தோ சாப்பிடலாம். எள் தொடர்ந்து சாப்பிடும் பொழுது, வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்தல் அவசியம். இதே போல் எள்ளிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெயைப் பயன்படுத்தும் போது புத்திக்கு தெளிவு, கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி, பார்வை கூர்மை போன்ற பல நன்மைகள் கிடைக்கும். 
இப்பொழுதெல்லாம் குழந்தைகள் வெளியில், வெய்யிலில் விளையாடுவதில்லை.

ell

தொலைக்காட்சியோ, மொபைல் போனோ கதியென்று இருப்பதால், அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. பெரியவர்களுக்கும் போதுமான உடற்பயிற்சி இல்லாததால் எலும்பு வலிமையை இழக்கிறது. மேலும் மாறுபட்ட உணவுகள் ஹார்மோன்களில் தாக்கத்தை ஏற்படுத்தி எலும்பு வலிமையை குறைந்துவிடுகிறது. இந்த நிலை மாறுவதற்கு, தோலுடன் உளுந்து ஒரு பங்கு, எள்  அரை பங்கு  எடுத்து தனித்தனியே நெய்விட்டு லேசாக வறுத்து அரைத்து வெல்லப்பாகு சேர்த்து உருண்டைகளாகப் பிடித்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள் பலம் பெறும்.

newsdesk Wed, 06/19/2019 - 14:00
seasame seed medicinal use எள் வைத்தியம் லைப்ஸ்டைல்

English Title

Sesame remedies for stabilizing bones

News Order

0

Ticker

0 ஆஸ்துமா, இருமல், மூச்சிரைப்பு, முகத்தில் கரும்புள்ளிகள் போன்ற உபாதைகளை தீர்க்கும் எருக்கஞ் செடி

எருக்கஞ் செடியின் மருத்துவ பயன்பாடுகள் பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு

நாம் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத எருக்கஞ்செடி, பல இடங்களில் காணப்படுகிறது. பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றினாலும் பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்டது எருக்கு. அவை பற்றி...

எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை. எருக்கம் இலையை வதக்கிக் கட்ட, கட்டிகள் பழுத்து உடையும். செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை 4-5 வரிசை அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்.

இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள், இழுக்க, ஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் குறைந்துவிடும்....

இலையை வாட்டி வதக்கிப் பிழிந்தெடுத்த சாறு, மூக்கினுள் 4- 6 சொட்டுகள் விட, உள்ளே அடைபட்டிருக்கும் கெட்டியான சளி கரைந்துவிடும். இதைக் காலையிலும், மாலையிலும் அளவுமிகாமல் கவனத்துடன் விட, தும்மலை ஏற்படுத்தி, மூக்கடைப்பை நீக்கிவிடும்.

பழுத்த இலைகளின் சாற்றை, நல்லெண்ணெய்யுடன் கலந்து, வெதுவெதுப்பாக காதினுள் விட்டுவர காதுவலி, செவிடு போன்ற காது சம்பந்தப்பட்டப் பிரச்னைகள் விரைவில் குணமாக வாய்ப்பிருக்கிறது.

இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும்.

காய்ந்த இலைகளைப் பொடித்து, புண்கள் மீது தூவ, அவை விரைவில் ஆறிவிடும். இலைச்சாறு மஞ்சள் தூளுடன் கலந்து கடுகெண்ணெய்யில் வேக வைத்து, தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வர, விரைவில் குணமாகும்.

இலைகளையும்,பூக்களையும் ஒன்றாக வேக வைத்த தண்ணீரை கினியா வோர்ம் எனும் புழுக்களை ஒழிக்க, அது பாதித்துள்ள கை,கால் பகுதிகளை முக்கி வைக்கலாம். ஆசனவாய் வழியாகச் செலுத்திக் குடலையும் சுத்தப்படுத்தலாம்.

எருக்கம் பூக்களைப் பொடித்து கருங்காலிக் கட்டை போட்டு வெந்தெடுத்த தண்ணீரில் சிட்டிகை கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குஷ்டம் எனும் கொடிய நோயின் தாக்கம் குறைந்துவிடும்.

எருக்கம் பூ நன்கு ஜீரண சக்தியை ஏற்படுத் தக்கூடியது. இருமல், சளி அடைப்பினால் ஏற்படும் மூச்சிரைப்பு நோய், பிறப்பு உறுப்புகளைத் தாக்கும் சிபிலிஸ், கொனோரியோ போன்ற உபாதைகளைக் குணப்படுத்தும். காலரா உபாதையில் இதன் பயன்பாடு நல்ல பலனைத் தருகிறது.

எருக்கம் வேர்த் தோலை விழுதாக வெந்நீருடன் அரைத்துச் சாப்பிட, உடல் உட்புறக் கொழுப்புகளை அகற்றி, வியர்வையைப் பெருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால் வாந்தியை ஏற்படுத்தும். வேர்த்தோலை அரிசி வடித்த கஞ்சியுடன் அரைத்து யானைக்கால் நோயில் பற்றிடலாம்..

தேள் கடித்த இடத்தில் எருக்கின் பாலைத் தடவி வர உடனே குறையும். பாம்புக் கடியிலும் இதைப் போலவே பயன்படுத்தலாம்.

மஞ்சள் தூளுடன் எருக்கம்பாலைக் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள், நிறமாற்றம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி வருவது நல்லது.

எருக்கு இலைச்சாறு 3 துளி, 10 துளி தேனில் கலந்துகொடுக்க, வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

எருக்கம் வேரைக் கரியாக்கிப் பொடித்து விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் கரப்பான், பால்வினை நோய் புண்கள், ஆறாத காயங்கள் தீரும். 
மருத்துவர்களின் ஆலோசனைகளின் பேரில் இந்த மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும்.

Arunpandiyan Tue, 02/05/2019 - 14:11
erukku health medicinal use herbal erukku லைப்ஸ்டைல் ஆரோக்கியம்

English Title

Medicinal uses of erukku plant

News Order

0
2018 TopTamilNews. All rights reserved.