• August
    21
    Wednesday

Main Area

Main



பேஸ்புக் காதலனுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை: மர்மான முறையில் இறந்து கிடந்த மருத்துவ மாணவி!

இந்துமதி-சதீஷ்குமார்
இந்துமதி-சதீஷ்குமார்
Loading...

ஒரத்தநாடு:  முகநூல் காதலனுடன் லிவிங் டுகெதரில்  குடும்பம் நடத்தி வந்த மருத்துவ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் பாலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகள் இந்துமதி.  இவர் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அதனால் அவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். 

fb

இந்நிலையில் இந்துமதி ஒரத்தநாடு எழுத்துக்கார தெருவில் உள்ள ஒரு வீட்டில்  இறந்து கிடந்துள்ளார். அவரது சடலத்துக்குப் பக்கத்தில் சதீஷ்குமார் என்பவர் குடிபோதையில் படுத்துக் கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுக்க போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

marriage

இதையடுத்து தற்கொலை குறித்து போலீசார் விசாரணையை ஆரம்பித்த நிலையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அதில், இந்துமதிக்கும்,  சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த டி.புதுக்கோட்டையைச் சேர்ந்த பொறியாளர் சதீஷ்குமார் என்பவருக்கும் பேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் நட்பு நாளடைவில் காதலாக மாற 2 ஆண்டுகளாக முகநூலில் காதலித்த இவர்கள் லிவிங் டுகெதர்  வாழ்க்கையில் தனிக்குடித்தனம் வாழ தொடங்கியுள்ளனர். பின்னர் இந்துமதி வீட்டில் விடுதியில் இருப்பதாகக் கூறி பெற்றோரை ஏமாற்றி வந்துள்ளார். மேலும் குடும்பத்தினருக்குத் தெரியாமல் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். 

ஆனால் அதன்பிறகு தான் சதீஷ்குமார்  பொறியாளர் அல்ல எலக்ட்ரீஷியன்  என்பது தெரியவந்தது. மேலும் அவர் வேலை வெட்டிக்குப்  போகாத குடிகாரர் என்பதால் காதல் கணவருக்கும் இந்துமதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

suicide

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி  போதையில் வீட்டுக்கு வந்த சதீஷ்குமார், இந்துமதியை அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இந்துமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இருப்பினும் மகளை சதீஷ்குமார் அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று இந்துமதியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனால் சதீஷ்குமாரை  கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.