kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

 மழை
மழை
Loading...

சென்னை: வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் ஓரிரு இடங்கள் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்ப சலனம் காரணமாகச்  சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்  வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தர்மபுரி, கிருஷ்ணகிரி,வேலூர்,  நீலகிரி தேனி, திண்டுக்கல் , ஈரோடு கோயம்புத்தூர்,  திருவண்ணாமலை , கடலூர் ,விழுப்புரம், நாகப்பட்டினம் , திருவாரூர் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கும்பகோணத்தில் மட்டும் 10 சென்டிமீட்டர் மழை பொழிந்துள்ளது. 

rain

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தலா  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.