• August
    21
    Wednesday

Main Area

Main



தமிழகத்தில் புயலுக்கு வாய்ப்பில்லை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

Rain
Rain
Loading...

தமிழகத்திலும் புயலுக்கான வாய்ப்பில்லை என்றும், மழை மட்டுமே பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள வெதர்மேன் பிரதீப் ஜான், வட தமிழகம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் பதிவிட்டுள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழையும், ஜூலை 19 முதல் 23 வரை கேரளா, கர்நாடகாவிலும் கனமழையும், பெய்யக்கூடும் என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரை இன்னும் சில தினங்களுக்கு மாலை அல்லது இர்வு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வெதர்மேன் பிரதீப் ஜான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.