• February
    25
    Tuesday

Main Area

Main



படப்பிடிப்பே முடியல அதற்குள் ரூ. 250 கோடி கல்லா கட்டிய ‘மாஸ்டர்’ 

விஜய்
விஜய்

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பே முடியாத நிலையில் அந்த படத்தின் வியாபாரம் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  நடிகர் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். விஜய்யின் 64-வது படமான இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது. அண்மையில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க இருக்கின்றன. வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படத்தைத் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மாஸ்டர்

மாஸ்டர் படத்தின் சேட்டிலைட் உரிமை சன்டிவி பெற்றுள்ளது. இதேபோல் டிஜிட்டல் உரிமம், வெளிநாட்டு ரிலீஸ் உரிமையும் விற்பனையாகிவிட்டதாக தெரிகிறது. தற்போது வரை மாஸ்டர் படம் சுமார் 250 கோடிக்கு மேல் கல்லா கட்டியதாக கூறப்படுகிறது. வெறும் ரூ. 150 கோடியில் தயாரிக்கப்பட்டு வரும் மாஸ்டர் படம் 250 கோடிக்கு மேல் விற்பனையாகி கிட்டத்தட்ட லாபம் ரூ.100 கோடியை சம்பாதித்திருக்கிறது. 

2018 TopTamilNews. All rights reserved.