kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


சங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள்! ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை!!  

Loading...

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, விக்கரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 3 பேர் தொடர்ந்து கொலை செய்யப்பட்டனர். அதில் ஒற்றுமை என்னவென்றால் மூவரும் 50 வயதைக் கடந்த முதியவர்கள். விக்கரமங்கலத்தில் பால்சாமி என்பவர் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தியபோது, அங்கு மனநோயாளி போல் ஒருவர் சுற்றித் திரிந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சந்தேகத்தின் அடிப்படையில் அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, ஒரு வேளை சோற்றுக்காக 3 பேர் கொலை செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தேனி மாவட்டம் கோவிந்தன்பட்டியைச் சேர்ந்த வேல்முருகனுக்கு, சிறு வயதிலேயே மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. சொந்த ஊரை விட்டு வெளியேறிய அவர் பல்வேறு பகுதியில் கேட்பாரற்று சுற்றித் திரிந்திருக்கிறார். சாப்பாடு கொடுக்காததால் உசிலம்பட்டியைச் சேர்ந்த தம்பதியை கொலை செய்துவிட்டு சிறை சென்ற அவர்,10 ஆண்டுகளுக்குப்பின் வெளியே வந்தார். பகல் நேரங்களில் பிச்சை எடுத்து பசியை போக்கிக் கொண்ட அவருக்கு, இரவில் உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பசி எடுக்கும் நேரங்களில் கண்ணில் படும் வீடுகளுக்குச் செல்லும் வேல்முருகன், அங்கிருப்பவர்களிடம் உணவு கேட்பாராம். சாப்பாடு கொடுத்தவர்கள் பிழைத்தார்கள். சாப்பாடுக்கொடுக்காமல் விரட்டியவர்கள் கதி அதோகதிதான்... சாப்பாடு கொடுக்காதவர்களை கோபத்தின் உச்சிக்கு சென்று கொடூரமாக தாக்கி அவர்களை கொலை செய்துவிடுவாரம். 

சோறு இல்லை என்று சொன்ன காரணத்திற்காகவே, விக்கரமங்கலத்தில் பால்சாமி, எழுமலையைச் சேர்ந்த வெள்ளைசாமி, லிங்கப்பநாயக்கணூரில் அய்யாவு ஆகியோர் கொலை  செய்துள்ளார் வேல்முருகன். சோற்றுக்காக தொடர்ந்து கொலைகளை செய்த வேல்முருகை கைது செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்துள்ளனர். 

2018 TopTamilNews. All rights reserved.