• August
    25
    Sunday

Main Area

Main



’தர்பார்’படத்தின் கதையை பப்ளிக்காக போட்டு உடைத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்...

தர்பார்
தர்பார்
Loading...

’தர்பார்’படத்தில் கடமை தவறாத காவல் அதிகாரி வேடத்தில்தான் ரஜினி நடிக்கிறார்’ என்பதை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தன் பங்குக்கு உறுதி செய்தார். அத்தோடு நில்லாமல் ரஜினிக்கு தான் பாடிய ஓபனிங் பாடல் சிச்சுவேஷனையும் அம்பலப்படுத்தினார்.

ரஜினியின் ‘தர்பார்’ மும்பை பகுதியில் கடந்த  2 மாதங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது மும்பை பலத்த மைழையின் பிடியில் சிக்கியுள்ளதால் படப்பிடிப்பு பேக் அப் செய்யப்பட்டுள்ளது.ரஜினியின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளது.படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியானதால் அதிக பாதுகாப்பு போட்டுள்ளனர். 

darbar

ரஜினி படங்களில் அறிமுக பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவது நெடுங்கால  வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக இந்த வழக்கம் இருந்து வந்தது. ஆனால் பா.ரஞ்சித் இயக்கிய முந்தைய 2 படங்களில் அவரை பாட வைக்கவில்லை. இது ரசிகர்களுக்கு குறையாக இருந்தது.இப்போது தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு அறிமுக பாடல் ஒன்று இருப்பதாகவும் அதை நான் பாடி இருக்கிறேன் என்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார். 

spb

அத்துடன் படத்தின் கதையையும் அம்பலப்படுத்தியுள்ளார். இதுகுறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறும்போது, “தர்பார் படத்தில் ரஜினிகாந்த் கடமை தவறாத நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவர் செய்த ஒரு பெரிய சாதனைக்காக பாராட்டு விழா நடத்துகின்றனர். அப்போது ரஜினிகாந்த் நான் கடமையைத்தான் செய்தேன். எனக்கு எதற்கு பாராட்டு விழா. போலீஸ் உடையை கழற்றினால் நானும் உங்களில் ஒருவன்தான் என்று வசனம் பேசுவார்.தொடர்ந்து ஒரு பாடலை பாடுவார். அந்த பாடலைத்தான் நான் பாடி இருக்கிறேன்” என்றார்.

தர்பார்’ல அடுத்த பாட்டு கிடைக்கிறப்போ அந்த சிச்சுவேஷனையும் சொல்லீட்டிங்கன்னா மொத்தக்கதையையும் கண்டுபிடிக்க வசதியாயிருக்கும் செய்வீங்களா பாலு சார்?

2018 TopTamilNews. All rights reserved.