• April
    05
    Sunday

Main Area

Main



'அடப்பாவிங்களா உங்க சண்டையில வயித்துல வளர்ற குழந்தைய கொன்னுட்டிங்களே ?'-எட்டி உதைத்து கருச்சிதைவு செய்த கணவனுக்கு சிறை..

representative image
representative image

மும்பையில் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் நடந்த குடும்ப சண்டையில் கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்ததால் கருச்சிதைவு ஏற்படுத்திய கணவனுக்கு மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மும்பையில் மனோஜ் என்ற கணவனுக்கும் ,சவிதா என்ற நான்கு மாத கர்ப்பிணி மனைவிக்கும் 2017ம் ஆண்டு அக்டோபர் 16 ம் தேதி குடும்ப சண்டை வெடித்தது .அப்போது அவரின் கணவர் மனோஜ் அவரின் மனைவியை அடித்த போது குறுக்கே அவரின் தாய் வந்தார், அவருக்கும் அடி விழுந்தது .பிறகு இருவருக்கும் சண்டை முற்றியதில் மனோஜ் அவரின் கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் எட்டி எட்டி உதைத்தார் . அதனால் அவரின் வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டது ,உடனே அவரின் தாய் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் .அங்கே அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது கருகலைந்தது தெரிய வந்தது .
அதனால் கோபமுற்ற அவரின் தாயும் மகளும் மனோஜ் மீது போலீஸ் புகார் கொடுத்தனர் .அந்த வழக்கு நடந்து அமர்வு நீதிமன்றம் மனோஜுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது .

2018 TopTamilNews. All rights reserved.