• November
    21
    Thursday

Main Area

Main



'பிக் பாஸ் வீட்டிற்குள் நடப்பது காதல் இல்ல செக்ஸ் தான்': கமலை கிழித்துத் தொங்கவிட்ட முன்னாள் போட்டியாளர்.!

பிக் பாஸ் 3
பிக் பாஸ் 3

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் காதல் குறித்து முன்னாள் போட்டியாளர் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 17 நாட்கள் வெற்றிகரமாகக் கடந்து விட்டது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் சண்டை சச்சரவுமாகச் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இது முன்பு இருந்த இரண்டு சீசன் போல் இல்லை என்று ரசிகர்கள் ஒரு குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். 

இது ஒரு பக்கம் இருக்க தற்போது உள்ள பிக் பாஸ் போட்டியாளர் குறித்து அவரவர் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் முன்னாள் சீசன் போட்டியாளர்களைப் பேட்டி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர் மமதி பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.

mamathi

அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு விஷங்களைப் பகிர்ந்துள்ளார். அப்போது பிக்பாஸில் நடக்கும் காதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியது தான் அதிர்ச்சியடைய வைத்தது. அவர் கூறியதாவது,' அவர்கள் செய்வது எல்லாம் லவ் இல்லை அது செக்ஸ். போன சீசனில் நடந்த அனைத்தையும் காண்பித்திருந்தால் நீங்கள் எல்லாரும் வீட்டில் லேப் டாப்பில் நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள். கவின் நான்கு பெண்களுடனும் மிகவும் நெருக்கமாகப் பழகி, 4 பெண்ணையும் காதலிப்பதாகக் கூறுகிறார். இதையெல்லாம் மக்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதையே ஒரு பெண் செய்திருந்தால் அதற்கு அர்த்தம் வேறு என்று சொல்வார்கள்' என்று மிகவும் ஓப்பானாகப் பேசியுள்ளார். 

mamathi

அதைத்தொடர்ந்து கமல் ஹாசன் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த மமதி, 'நம்மில் யாராவது தமிழில் பேசினால் அவருக்கு நக்கலாக தான் இருக்கும். ஆனால் அவரே தமிழில் வார்த்தைகளைத் தேடித் தேடி பிடித்து தான் பிக்பாஸில் பேசுகிறார்.  இதில் அவர் நான் தமிழில் பேசும் போது நக்கல் செய்தார். நான் தமிழில் பேசியதை இளக்காரமாகப் பார்த்தார்' என்று சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.  
 

2018 TopTamilNews. All rights reserved.