• March
    30
    Monday

Main Area

Main



மோடியுடன் பேச தயார்... ஆனால் முதல்ல குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் வாங்கணும்.. மம்தா பானர்ஜி நிபந்தனை..

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கடந்த திங்கட்கிழமையன்று மேற்கு வங்க சட்டப்பேரவையில் முதல்வர் மம்மா பானர்ஜி தலைமையிலான அரசு தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய நான்காவது மாநிலம் மேற்கு வங்கம். தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றையும் மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என்பதில் மம்தா பானர்ஜி உறுதியாக உள்ளார்.

பிரதமர் மோடி

இந்நிலையில் மம்தா பானர்ஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் தயாராக இருக்கிறார் என்பது நல்லது. ஆனால் முதலில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற்றால்தான் அவருடன் பேசுவேன்.  காஷ்மீர் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான முடிவு எடுப்பதற்கு முன்பு அனைத்து கட்சி கூட்டத்துக்கு கூட மத்திய அரசு ஏற்பாடு செய்யவில்லை. 

தேசிய குடிமக்கள் பதிவேடு

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவை நாட்டுக்கு தீங்கானது. நாங்கள் ஒருங்கிணைந்த இந்தியா, ஒருங்கிணைந்த மேற்கு வங்கத்தை விரும்புகிறோம். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.