• April
    06
    Monday

Main Area

Main



மங்களூரு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி நிறுத்திய எடியூரப்பா! தலா ரூ.5 லட்சம் அறிவித்த மம்தா

mamata and yeddyurappa
mamata and yeddyurappa

மங்களூரு துப்பாக்கிச் சூட்டில் உயிரிந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்குவது நிறுத்தப்படுவதாக எடியூரப்பா அறிவித்த நிலையில் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Mangalore riot


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கர்நாடக மாநிலம் மங்களூருவில் கலவரம் வெடித்தது. இதை அடக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால், அவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வரும் பா.ஜ.க தலைவருமான எடியூரப்பா அறிவித்தார். ஆனால், திடீரென்று இந்த அறிவிப்பை நிறுத்திவைப்பதாக கூறினார். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி முடித்த பிறகே நிதி உதவி வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று அறிவித்தார். இது நாடு முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்து வரும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான கூட்டத்தில் பேசிய மம்தா இதை அறிவித்தார். மம்தாவின் இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.