darbar
  • January
    20
    Monday

Main Area

Main



இலங்கை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ச ! கோத்தபய ராஜபக்ச திடீர் முடிவு!

மஹிந்த ராஜபக்ச,கோத்தபய ராஜபக்ச
மஹிந்த ராஜபக்ச,கோத்தபய ராஜபக்ச

இலங்கையில் கடந்த சனிக்கிழமை நடைப்பெற்ற அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி பெரும் வெற்றியைப் பெற்றது. இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து ஆலோசித்ததாக செய்திகள் வெளியான நிலையில், இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர், விரைவில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

rajapaksa

இந்நிலையில், திடீரென்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  இலங்கைக்கு காபாந்து அரசு அமைப்பதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இலங்கையில் காபந்து பிரதமராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தா ராஜபக்ச பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2018 TopTamilNews. All rights reserved.