• February
    24
    Monday

Main Area

Main



“மாஃபியா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மாஃபியா
மாஃபியா

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 


தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.  குற்றம் 23, செக்க சிவந்த வானம் என்று தனது செகண்ட் இன்னிங்ஸில் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்திய தடம் அமோக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து துருவங்கள் பதினாறு பட இயக்குநர்  கார்த்திக் நரேன் இயக்கத்தில் நாயகனாக அருண் விஜய் நடித்துள்ளப்படம் மாஃபியா. த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் டீசர் கடந்த 6 மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் பிப்ரவரி 21-ம் தேதி திரைக்கு வரும் என்று படத்தின் இயக்குநர் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.