kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


ஆரம்பமானது அட்டூழியம்: மாட்டிறைச்சி வைத்திருந்த முஸ்லீம் தம்பதியை மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் கொடூரர்கள்: பதற வைக்கும் வீடியோ!

தாக்குதல்
தாக்குதல்
Loading...

மத்திய பிரதேசம்:  மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்களை   மரத்தில் கட்டிப் போட்டுச் செருப்பினால் அடித்துள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

மத்திய பிரதேசத்தின் சியோனி பகுதியில் ஆட்டோவில் இரண்டு முஸ்லீம் மதத்தை  சேர்ந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த, பசு காவலர்கள் என்று சொல்லி கொள்ளும் அரக்கர்கள் சிலர், ஆட்டோவை வழிமறித்து அவர்களைத் தாக்கியுள்ளனர்.

beef

மேலும் இரண்டு ஆண்களையும் மரத்தில் கட்டி வைத்து இரும்பு கம்பியால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். அந்த பெண்ணின்  கணவரை கொண்டே அந்த பெண்ணை அடிக்க வைத்துள்ளனர். மேலும் செருப்பால் அடித்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற சொல்லி வற்புறுத்தி மிருகதனமாக நடந்து கொண்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

beef

இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  முஸ்லீம் அமைப்புகள் உட்படப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள  சிலரை தேடி வருகின்றனர்.

 

வட மாநிலங்களில்  மாட்டிறைச்சி தொடர்பாக பல்வேறு அடக்குமுறைகள் இந்துத்துவா வாதிகளால் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கிறது. சில மாதங்களாக  அது சற்று அடங்கியிருந்த வேளையில், பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மீண்டும் இது போன்ற அடக்குமுறைகள் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.