kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


என் தற்கொலை முயற்சிக்குக் காரணம் இவர் தான்? பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு மதுமிதா பேட்டி 

மதுமிதா
மதுமிதா
Loading...

பிக் பாஸ் 3வது சீசன்னில் கடந்த சனிக்கிழமை மதுமிதா அதிரடியாக வெளியேறினார். வீட்டின் விதிமுறைகளை மீறி தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் விட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதிலிருந்து மதுமிதா தான் தற்போது சமூக வலைத்தளங்களின் ஹாட் டாபிக் மாறியுள்ளார். அவர் தற்கொலைக்கு முயற்சிக்கு காரணம் என்ன?, பிக் பாஸ் வீட்டில் அன்றைய தினம் நடந்தது என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள மதுமிதா பிரபல இணையதள தொலைக்காட்சி ஒன்றிக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பல விஷயங்கள் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, 'பிக் பாஸ் 2வது சீசனிலேயே எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்ததால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. பிறகு மூன்றாவது சீசனில் வாய்ப்பு தேடிவந்ததால் தவிர்க்க முடியவில்லை. சம்மதித்துவிட்டேன்.  

madhu

பிக் பாஸ் வீட்டில் முதலில் எனக்கு ஷெரீனுடன் தான் பிரச்சினை ஏற்பட்டது.  நம் தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு உடைகளும் அணியவில்லை. எவ்வளவு சொல்லியும் அபி, ஷெரின் அங்கிலிலத்தில் தான் பேசினார்கள். இதை நான் கேட்டேன், ஆனால் அதை எனக்கே திருப்பிவிட்டனர்.  

கவின் யாரையும் மதிக்கமாட்டான் எப்போதும் பெண்கள் கூட தான் சுற்றுவான். ஒரு அக்கா மாதிரி அவனுக்கு அறிவுரை கூறியும் அவன் அதை ஏற்கவில்லை. எனக்கு குள்ளச்சி என பெயர் வைத்தது கவின் தான், அது எனக்கு சுத்தமாகப் பிடிக்கவே இல்லை. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒரே நியாயமான மனிதர் சேரன் தான். லாஸ்லியாவை அவர் மகளாகத் தான் நினைக்கிறார். ஆனால் லாஸ்லியா கவினுடன் சேர்ந்த பிறகு அவளது மனம் மாறிவிட்டது.  

madhu

பிக் பாஸ் வீட்டில் ஆண்கள், பெண்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். கடந்த 55 நாட்களாக இதுதான் நடக்கிறது.கடந்த வியாழக்கிழமை ஹலோ டாஸ்கில் நான் என்னுடைய கருத்தை சொன்னேன். வருண பகவான் கூட கர்நாடகாக்காரர் தான் போலிருக்கு? நமக்கு மழையே கொடுக்க மாட்டேங்கிறார். தயது செய்து வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என்று சொன்னேன். 

அதற்கு ஷெரின் எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகாவை சேர்ந்த நான் இங்கு இருக்கும் போது எப்படி நீ இப்படி ஒரு கருத்தைக் கூறலாம். இது ஒன்றும் உன்னுடைய சமூக வலைத்தளம் கிடையாது என கத்தினார்.  ஹலோ ஆப் ஒரு சமூக வலைத்தளம் தானே. அதில் என்னுடைய கருத்தைச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என கேட்டேன். ஆனால் அவர்கள் ஒற்றுக் கொள்ளவில்லை. நீ என்ன எப்ப பார்த்தாலும் தமிழ் பெண் சொல்ற. தமிழக மக்களுக்காக உயிரைக் கொடுக்க முடியுமா? என்று இன்னும் நிறைய பேசி என்னை கிழத்தனமாகப் பேசினார்கள்.  அதனால் தான் நான் எனது கையை அறுத்துக்கொண்டு எனது நியாயத்தை நிரூபித்தேன். நான் கையை அறுத்துக்கொண்ட போது எனக்கு ஆதரவாக இருந்தது சேரனும், கஸ்தூரியும் தான். வேறு யாரும் என்னிடம் வரவில்லை. இனி பிக் பாஸ் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்க மாட்டேன்' என்று கூறியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.