• November
    12
    Tuesday

Main Area

Main



இந்தியன் 2 பட விவகாரம்: ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய லைக்கா? 

ஷங்கர்
ஷங்கர்

சென்னை: இயக்குநர் ஷங்கருக்கு லைக்கா நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னதாக தொங்கியது. அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

அதையடுத்து இந்தியன் 2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த கையோடு அதன் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஷங்கர் படத்தின் மொத்த பட்ஜெட் விவரத்தைத் தயாரிப்பு நிறுவனத்திடம் சமர்ப்பிக்கவில்லை என்றும் படத்தில் கமல்ஹாசனின் மேக்கப் குழு சரியாகச் செய்யவில்லை என வேறொரு குழுவை ஷங்கர் ஒப்பந்தம் செய்ததால் சிறு குழப்பங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

indian 2

இதனால் படம் அடுத்த கட்டத்துக்கு நகராமல் கிடைப்பிலே போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஷங்கர் தனது அடுத்த படத்துக்கான வேலையில் இறங்கியுள்ளதாகவும்,அது சம்பந்தமாக இரண்டு தயாரிப்பாளர்களையும், தெலுங்கு நடிகர் பிரபாஸையும் அணுகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா உடனடியாக ஷங்கருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், 'மற்ற வேலைகளையெல்லாம் கைவிட்டுவிட்டு உடனடியாக இந்தியன் 2 படப்பிடிப்பைத் தொடங்குங்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் கமல்ஹாசன் தற்போது அரசியல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.