• November
    19
    Tuesday

Main Area

Main



மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் உள்ளது - லாஸ்லியா

Losliya
Losliya

மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் தனக்கு இருப்பதை உணர்ந்திருப்பதாக பிக்பாஸ் போட்டியாளர்களுள் ஒருவரான லாஸ்லியா தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லாஸ்லியா, பிக்பாஸில் கலந்துகொண்ட பின் தமிழக ரசிகர்களின் அன்பை சம்பாதித்தார். 

இயக்குநர் சேரனுடனான மனக்கசப்பு, கவினுடனான காதல், சாக்‌ஷி அகர்வாலுடனான மோதல் என பல்வேறு கோணங்களை வெளிகாட்டிய லாஸ்லியா பிக்பாஸில் 3 ஆவது இடத்தை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து இத்தனை நாட்கள் சென்னையில் உலாவந்த லாஸ், தற்போதுதான் இலங்கைக்கு திரும்பியுள்ளார். 

Losliya

இலங்கை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லாஸ்லியா, “பிக்பாஸ் நிகழ்ச்சி என்னைப் போன்ற சாதாரண பெண்ணுக்கும் புகழ் வெளிச்சத்தைத் தந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் என்னை யாருக்கும் தெரியாது. ஆனால் தற்போது கிடைத்திருக்கும் புகழுக்கு பிக்பாஸ் மட்டுமே காரணம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பளித்த அந்நிகழ்ச்சி குழுவினருக்கும், என்னை வெற்றிப்பெற வைத்த ரசிகர்களுக்கும் எனது நன்றி. எனக்கு மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன்” என்று கூறினார். 
 

2018 TopTamilNews. All rights reserved.