kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


சாக்ஷிக்கு துரோகம் செய்து கவினை கரெக்ட் செய்த லாஸ்லியா? 

கவின்- லாஸ்லியா
கவின்- லாஸ்லியா
Loading...

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை அந்த விட்டில் சுற்றிவரும் ஒரு விஷயம் காதல். முதலில் கவின், லாஸ்லியா, சாக்ஷியின் முக்கோண காதல் கதை ஒளிபரப்பானது. அது சற்று போர் அடித்துவிட்டதால் அதிலிருந்து சாக்ஷியை எலிமினேட் செய்து அனுப்பிவிட்டனர். சாக்ஷி சென்ற பிறகு கவின்- லாஸ்லியா மிக நெருக்கமாகவுள்ளனர். ஆனால் அது எல்லாம் காதல் இல்லை வெறும் நட்பு தான் என்று மக்களளை ஏமாற்றிக்கொண்டு இருந்தனர். 

kavin and losliya

இந்த நிலையில் தற்போது இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் லாஸ்லியா மற்றும் சேரன் கார்டன் ஏரியாவில் இருக்கும் frooti இடத்தில் தனியாக பேசுகின்றனர். அப்போது லாஸ்லியா, 'தப்போ, சரியோ கவின் எனக்காக நின்றுருக்கிறான். முன்னாடி அவனை பிடிக்கும். இப்போது அவனை ரொம்ப பிடிக்கும். அவனும் உண்மையாக பிடிச்சிருக்கு சொல்றான். இந்த உலகம் என்ன நினைக்கிறது என்பது எனக்கு தேவையில்லை. அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போவது என்பது வெளியே சென்ற பிறகு தான்' என்று கூறியுள்ளார். இதை கண்ட ரசிகர்கள், 'இது பெயர் தான் நட்பா?' என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 

பிக் பாஸ் வீட்டை விட்டு சாக்ஷி வெளியேறும் முன்பு கவின்-லாஸ்லியா பழகுவது நட்பு போல் இல்லை என்றும் தன் முன்பே கைகோர்த்து ஒன்றாக இருப்பது கவலையே ஏற்படுத்துகிறது என்றும் கூறியிருந்தார். ஆனால் அவரின் தொலை நோக்கு பார்வை புரியாமல் மக்கள் அவரை எலிமினேட் செய்து அனுப்பிவிட்டனர். 

2018 TopTamilNews. All rights reserved.