• February
    22
    Saturday

Main Area

Main



ஒரு தெருவில் ஒரு வீட்டில் மட்டும் ‘இது பத்தினி வீடு’ என போர்டு மாட்டியிருந்தால்?

Lok Sabha speaker Om Birla
Lok Sabha speaker Om Birla

ராஜஸ்தான், கோட்டா நகரில் மூன்று நாட்களுக்கு முன்பு அகில பிராமண மகாசபை கூட்டம் அதாவது அகில இந்திய பிராமண சலச்சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா கலந்துகொண்டு ‘வாழ்த்துரை’ வழங்கினார். ’நாட்டுக்கே வழிகாட்டியது பிராமண சமுதாயம், கல்வியையும் நெறிகளையும் சமூகத்தில் பரவி தழைத்தோங்கச் செய்தது பிராமண சமுதாயம் தான். இன்றுகூட ஒரு கிராமத்தில் ஒரே ஒரு பிராமண குடும்பம் இருந்தாலும் மற்றவர்களை அந்தக்குடும்பம் கல்வியிலும் தியாகத்திலும், சேவை மனப்பான்மையிலும் மற்றவர்களைவிட உயர்ந்ததாக இருக்கும்” என வானளாவ புகழ்ந்திருந்தார்.

Speaker's controversial statement

விழாவில் பேசியதுபோக, டிவிட்டரில் பேஸ்புக்கிலும் இதே கருத்தை முன்வைத்திருந்தார். பிராமணர்கள் தங்களது தியாகத்தாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளனர். இதனால்தான் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அவர்கள் திகழ்கின்றனர் என்று தனது கருத்தை திரும்பவும் வலியுறுத்தி இருந்தார். நிறைய வீடுகள் இருக்கும் ஒரு தெருவில் ஒரு வீட்டிற்கு வெளியே மட்டும் இது பத்தினி வாழும் வீடு போர்டு மாட்டியிருந்தால் எப்படி சரியாகும் என பெரியார் கேட்டதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. ராஜஸ்தான் மாநில மக்கள் சிவில் உரிமை கழக தலைவர் கவிதா ஸ்ரீவாத்சவா மக்களவை தலைவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, இது ஜாதிய துவேஷம், எனவே மக்களவை தலைவர் தனது கருத்தை உடனடியாக வாபஸ் வாங்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.