kaappan-mobile kaappan-large
  • September
    18
    Wednesday

Main Area

lok sabha election 2019

State Committee dissolved

கட்சி கலைப்பு! ராகுல் அதிரடி உத்தரவு

ராகுலை பிரதமராக்க தேவையான எண்ணிக்கையிலான எம்.பிக்களை பெற்றுத்தரும் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகாவை அதிகம் எதிர்பார்த்திருந்தது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. மதச்சார்பற்ற ஜ...

’திருட்டு ரயிலில் வந்த கருணாநிதியின் மகன்’...ஒரு முரட்டுச் சண்டைக்கு திமுகவை இழுக்கும் ராஜேந்திர பாலாஜி...

உளறிக்கொட்டுவதில் நம்பர் ஒன் எனப் பெயரெடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ’கஞ்சிக்கு இல்லாமல் திருட்டு ரயிலில் வந்த கருணாநிதியின் மகன் ஸ்டாலின் இன்று அம்பானி குடும்பத்திலிருந்து வந்த மிட்டா மிராசு மாதிரி பேசுகிறார்’ என நாகரிகமில்லாமல் முக.ஸ்டாலினை விமர்சித்தார்.

rajendra balaji

தேர்தல் தோல்விக்குப்பின் இன்று மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்த  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்களின் எண்ணம். இந்த ஆட்சியை நடத்துவதற்கு எவ்வளவு பெரும்பான்மை தேவையோ அதை எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் வழங்கியுள்ளார்கள். மக்கள் சிந்தித்து கொண்டிருக்கும் நேரத்தில் விஷத்தை விதைத்து, அதன் மூலமாக திமுகவினர் வெற்றியை அறுவடை செய்துள்ளார்கள். இதை உறுதியான வெற்றியாக கருத முடியாது. அதிமுக இரண்டாக பிரிந்துள்ளதை பலமாக வைத்து திமுக தந்திரமாக வாக்குகளை கைப்பற்றியது. 

rajendra balaji and stalin

ஒருவேளை சட்டசபையிலும் கூட திமுக அதிமுகவை வீழ்த்தி இருந்தால் சட்டமன்றத்தில்  எப்படியும்  வெற்றி பெற்று எங்களால் ஆட்சியை காப்பாற்றியிருக்க முடியும். சட்டமன்றத்தில் எடப்பாடி ஆட்சி தான் வேண்டும் என மக்கள் கொடுத்திருக்கின்ற வைரம் கீரிடம் தான் இந்த ஆட்சி. அதிமுகவை அழிப்போம் என்று கூறியவர்கள் அழிந்து விட்டார்கள். எங்களுக்கு இனிமே போட்டி திமுக மட்டும்தான். தினகரன் எத்தனை நாள் பொய் சொல்லி கட்சியை ஏமாற்ற முடியும்.

திமுக பெற்ற வெற்றி தமிழகத்தில் பூஜ்ஜியம் தான்.இதனால் அவர்களுக்கு எந்த ஒரு பலனும் கிடைக்காது. மத்தியில் பாஜக அசுர பலத்தில் வந்துள்ளது. தமிழகத்திற்கு தேவையான நிதிகளை வழங்குவார்கள்.எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் உத்தமபுத்திரன் மாதிரி அம்பானி குடும்பத்திலிருந்து பிறந்து வந்த மாதிரி பேசி வருகிறார். கஞ்சிக்கு இல்லாமல் திருட்டு ரயிலில் வந்த கருணாநிதியின் மகன் தான் ஸ்டாலின் இன்று மிட்டா மிராசு மாதிரி பேசி வருகிறார். 

rajendra balaji

23ம் தேதி அனைவரும் ஜெயிலுக்கு சென்று விடுவார்கள். முதலமைச்சராக போகிறேன் என்று கலைஞர் கல்லறையில் தான் அமைச்சரவை பதவி ஏற்க வேண்டும் என்று இடம் பார்த்தார்கள். ஆனால் தமிழகத்தில் அவர் முதல்வர் ஆவதை மக்கள் விரும்பவில்லை. அவர் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றால் கூட தமிழகத்தின் முதல்வராக முடியாது’ என்று பொங்கித் தீர்த்தார் ராஜேந்திர பாலாஜி. விரைவில் அண்ணன் துரை முருகனிடமிருந்து ராஜேந்திர பாலாஜிக்கு இதே தரத்தில் பதில் பேட்டியை எதிர்பார்க்கிறோம்.

admin Fri, 05/24/2019 - 16:49
Rajendra Balaji Stalin lok sabha election 2019 ராஜேந்திர பாலாஜி,ஸ்டாலின் தேர்தல் முடிவுகள் தமிழகம்

English Title

rajendra balaji scolded stalin for no reason and make fight with DMK

News Order

0

Ticker

1 
விவேக் ஓபராய்

மோடியை வெறுப்பதைவிட்டுட்டு தேசத்தை நேசியுங்கள்: எதிர்க்கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்த விவேக் ஓபராய் 

மோடியை வெறுப்பதைவிட்டுட்டு தேசத்தை நேசியுங்கள் என்று எதிர்க்கட்சியினருக்கு நடிகர் விவேக் ஓபராய் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இரண்டாவது பெண் பிரதமராக மம்தா அவதரிப்பாரா?

இந்திரா காந்தியை ஆதரித்து அரசியலில் தடம் பதித்த மேற்குவந்த முதலமைச்சர் மம்தா, அவருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது பிரதமராக அரியணையேறுவாரா என்பது பெரிய எதிர்பார்ப்பாகவுள்ளது. 

mamata

கடந்த சில நாட்களாக மோடிக்கு பயத்தை கொடுத்தவரும், சரமாரியாக திட்டவைத்தவருமான மம்தா மேற்கு வங்காளத்தில் ஆட்சி அமைத்து பாஜகவை மேற்கு வங்காளத்திற்குள் கால்பதிக்க விடாமல் இருப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பாக்கவேண்டும். பாஜகவை வீழ்த்தும் அணி மூன்றாவது அணியோ அல்லது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவோ திரிணாமுல் காங்கிரசின் ஆதரவு கட்டாயம் தேவைப்படும். 

மத்திய பாரதிய ஜனதா அரசின் தவறுகளை தட்டிக்கேட்கும் துணிச்சலான முதல் தலைவராக மம்தாதான் அறியப்படுகிறார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகளை அணி திரட்டும் மம்தாவை பார்க்கும்போது அவர் மனதில் பிரமதர் ஆசை இருப்பதாகவே தெரிகிறது. மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். 

mamata

கடந்த சில நாட்களுக்கு முன் மேற்குவங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மம்தா, "மோடியை ஜனநாயகம் மூலம் அடிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார். அதற்கு, "மம்தா என்னை அடிப்பதாக கூறியுள்ளார், நீங்கள் என்னை அடிப்பது ஆசிர்வதிப்பதற்குச் சமம், எனவே என்னை தாராளமாக அடியுங்கள்" என்று பதிலளித்தார் பிரதமர். இப்படி இவர்கள் இருவருக்குமே அடிக்கடி வார்த்தை போர் மூளும்.

மேற்கு வங்காளத்தில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு ஆட்சி செய்து வந்தது. அவர்களை விரட்டி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கொண்டு வந்து ஆட்சியை நிலை நாட்டியவர் மம்தா. 1998 ஆம் வருடம் ஜனவரி 1 ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் தொடங்கப்பட்டது. இதுவரை 2 முறைதான் மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி களம் கண்டுள்ளது. இந்நிலையில் தற்போது முதலமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் பதவிக்கு பிரமோஷன் அடைவார் என்பதை இன்னும் 3 நாட்களில் தெரியும்...

admin Mon, 05/20/2019 - 11:22
Mamata Banerjee lok sabha election 2019 Modi மம்தா தேர்தல் களம்

English Title

Will Mamata be the second woman prime minister?

News Order

0

Ticker

0 
ஸ்ரீகாந்த்

ஒத்த ஓட்ட போட்டுட்டு ஸ்ரீகாந்த் படுறபாடு இருக்கே அய்யயோ.....

நடிகர் ஸ்ரீகாந்த் வாக்காளர் பட்டியலில் பெயரில்லாமல் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த முடியாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து...


சீமான்

வேலூரில் நாங்கள் செலவு செய்த தொகையை திருப்பி தருவார்களா? சீமான் ஆவேசம்!

மோடி ராகுல்  இருவரில் யார் வந்தாலும் எந்த மாற்றமும் நடைபெறாது  என்று நாம்  தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 


தூத்துக்குடி தொகுதி

பொய் சொல்கிறார் கனிமொழி - தமிழிசை குற்றச்சாட்டு

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பொய் பிரச்சாரம் செய்து வருவதாக பாஜக மாநில தலைவரும், தூத்துக்குடி தொகுதி வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 
புதிய சின்னம்

குக்கர் போய் கிஃப்ட் பேக் வந்தது..! இனி தமிழ்நாடு முழுக்க பரிசு மழை தான்

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னமாக  'பரிசுப் பெட்டி' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி தொகுதி

தமிழிசையால் தூத்துக்குடியில் போட்டியிட இருந்த இயக்குனர் கௌதமன் திடீர் வாபஸ்

மக்களவைத் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்காக  வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த இயக்குனர் கௌதமன் திடீரென வாபஸ் பெற்றுள்ளார்.பிரச்சாரம்

இது அட்டகாசப் புலி, இது அட்ராக்ட் பண்ற புலி என டி.ஆர் பாணியில் மோடியைப் புகழ்ந்த அதிமுக அமைச்சர் 

இந்தியாவிற்கு பிரச்சனை என்றால் மோடி ஸ்டண்ட் மாஸ்டராக மாறி நாட்டை காப்பாற்றுவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 


கனிமொழி

ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணத்தை வாரி இறைக்கும் கனிமொழி, வைரலாகும் வீடியோ - அதிமுக புகார்

தேர்தல் பிரச்சாரத்தின் போது, தன்னை ஆரத்தி எடுக்குப்பவர்களுக்கு கனிமொழி பணத்தை வாரி இரைப்பதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜனின் வேட்புமனு பரிசீலனை ஒத்தி வைப்பு - என்ன காரணம் தெரியுமா ?

தூத்துக்குடியின் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு பரிசீலனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சவுகிதார் பந்தானா

நம்பர் ப்ளேட்டோடு சவுகிதார் சேர்த்ததால் அபராதம் கட்டிய பாஜக எம்.எல்.ஏ

சவுகிதார் என்றும் பாராமல் காவல்துறையினர் இப்படி அபராதம் விதித்ததை நினைத்து ராம் டங்கூர் மனம் வருந்தியிருக்கிறார்.


இம்ரான் கான்

இந்தியாவில் தேர்தல் முடியும் வரை நமக்கு அபாயம் தான் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

தேர்தலுக்கு முன்பு இந்தியா மீண்டும் நம் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார்.


தேர்தல்

தேர்தலுக்கு வாங்கப்பட்ட மை பாட்டில்களுக்கு ஆன செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?

நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்காக  26 லட்சம் அழியாத மை பாட்டில்களை தலைமை தேர்தல் ஆணையம் வாங்கியுள்ளது.


M.K.Stalin

தேர்தல் சம்பந்தமாக திமுக தொடர்ந்த வழக்கு - 28ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது

இடைத்தேர்தல் நடக்க இருக்கும் 18 தொகுதிகளுடன் சேர்த்து, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை வரும் 28 - ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிம...


மக்களவைத் தேர்தல்

நாளை கடைசி நாள் - விஐபி வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல்

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்பதால் பெரும்பாலான விஐபி வேட்பாளர்கள் இன்று தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய...


திருமாவளவன் கண்டனம்

தேர்தல் விதிமுறைகளை மீறி விட்டார் முதல்வர் - தொல்.திருமாவளவன் கண்டனம்

நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் விதிமுறைகளை மீறி ராணுவ வீரர்களைக் குறிப்பிட்டு பேசியது சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.