விளையாடச்சென்ற சிறுமி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு ! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainவிளையாடச்சென்ற சிறுமி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு !

abinaya
abinaya

குளம் குட்டைகளில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பது, ஆழ்துளைக்கிணறுகளில் விழுந்து உயிரிழப்பது எனத் தொடர்ந்து குழந்தைகளின் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை திருவெற்றியூரில், வெந்நீரில்  வயதுக் குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணம், பெற்றோர்களின் அலட்சியமே காரணம் என்று பல மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டில் 8 வயது சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. 

ttn

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள  கொளத்தநல்லூர் சேர்ந்த பூபாலன் என்பவருக்கு 8 வயது பெண் குழந்தை உள்ளது. அந்த சிறுமியின் பெயர் அபிநயா. இவர் வீட்டின் அருகே உள்ள தனியார்ப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அபிநயா, அவளது நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

ttn

அபிநயா நெடுநேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள், சந்தேகத்தின் பேரில் அந்த கிணற்றில் பார்த்துள்ளனர். அப்போது அபிநயாவின் சடலம் கிணற்றில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அபிநயாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

2018 TopTamilNews. All rights reserved.