kaappan-mobile kaappan-large
  • September
    18
    Wednesday

Main Area

சிசேரியன்ல குழந்தை பிறந்தும் நடிகைகள் ஸ்லிம்மாக இருப்பது இப்படித்தானாம்!

நதியா கம்மல், நதியா தோடு, நதியா கொண்டை என்று ஒரு காலத்தில் தமிழகம் முழுக்கவே ஆடைகளுக்கும், அழகுக்கும் நதியா புராணம் பாடிக்கொண்டிருந்தது. அதன் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டு, இரு குழந்தைகளுக்கு தாயாகி மும்பையில் செட்டிலாகிவிட்ட நதியா திரும்ப நீ...ண்ட வருடங்கள் கழித்து நடிக்க வரும் போது பழைய நதியாவாகவே வந்திருந்தார். ஏன்.. ஸ்லிம் சிம்ரன், பழைய சிம்ரனாக ரஜினியுடன் டூயட் பாடும் அளவிற்கு வந்திருந்தாரே... இவர்கள் எல்லாம் கல்யாணம் பண்ணிக்கொண்டு, சிசேரியன் முறையில் குழந்தைகளையும் பெற்றெடுத்து பின் எப்படி ஸ்லிம்மாகவே உடம்பை வைத்திருக்கிறார்கள் என்கிற ரகசியம் தெரியுமா? 

nadhiya

இதெல்லாம் ரொம்ப சிம்பிளான விஷயம் தான்... தேவை உடம்பின் மீது நிறைய அக்கறையும், கொஞ்சம் விடாமுயற்சியும் தான்!
பெண்களின் உடலமைப்பு படி இயல்பாகவே திருமணம் முடிந்த பின்னரோ, குழந்தை பிறப்புக்குப் பின்பே எடை கூடிவிடும். கர்ப்ப காலத்தில் எடை கூடுவது முக்கிய காரணமாக சொல்லப்பட்டு வந்தாலும், கற்பகாலத்தில் 12 கிலோ வரை எடை கூடலாம்.  கருவுற்றிருக்கும் போது உடல் எடை 9 மாதங்கள் நிதானமாகவும் கொஞ்சம் கொஞ்சமாகவும் தான் அதிகரிக்கிறது.

simran

அதே போல நாம் உடல் எடையை குறைக்கும் போதும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயற்சி செய்வதே சிறந்த பலன்களைத் தரும்.  குழந்தை பெற்றெடுத்த பின்பு முதல் 40 நாட்கள் தாய்மைக்கு முக்கியமான காலங்களாக இருக்கின்றன. இந்த காலங்களில் உடலளவிலும், மன அளவிலும் தெம்பு கிடைப்பதற்ஆக பெண்கள் நன்றாக சாப்பிட்டு நல்ல ஓய்வு எடுத்து தங்கள் உடல் எடை அளவிலும் மனதளவிலும் சீராக்கிக் கொள்ள வேண்டும்.  உடல் எடையை குறைக்க வேண்டும் என்று உணவு சரியாக சாப்பிடாமல் இருந்தால் அது பின்னர் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதினால், இந்த காலக்கட்டங்களில் நிச்சயமாக நீங்கள் வழக்கமாக உண்பதைவிட 300 கலோரி அளவு சரியான ஊட்டச்சத்துள்ள உணவை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் 500 கலோரிகள் வரை உங்கள் எடை குறைவதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது. பேறு காலம் முடிந்து 40 நாட்களுக்குப் பின்பு மெல்ல மெல்ல உடல் எடைக் குறைப்புக்கான பயிற்சிகளை மேற்கொள்ளலாம் அதிலும் அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் நிச்சயம் மருத்துவரின் அனுமதியுடன் அவர்கள் சொல்லும் காலம் வரை காத்திருந்து அதன் பின் எளிய உடற்பயிற்சிகளில் ஆரம்பிக்கலாம்.

pregnant women

பிரசவத்திற்கு பின்பு எடை குறைப்பின் முக்கியம் உங்களுக்கு இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ளும் விருப்பம் இருந்தால் உடல் எடை குறைப்பது மிக முக்கியமான ஒன்றாகும். மிக மெதுவான நடைப்பயிற்சியில் ஆரம்பித்து நீங்கள் நடக்க முயற்சிக்கலாம். உடல் பயிற்சியை ஆரம்பித்ததும் வயிற்றுப்பகுதியை குறைக்க வேண்டுமென்று முழுக்கவனத்தையும் செலுத்தாமல் நடப்பதன் மூலம் உடலின் மொத்த எடையையும் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும் பயிற்சிகளைச் செய்யலாம். அதன் பின் இறுதியாக உங்கள் தசைகளுக்கு வலு சேர்க்க கூடிய பயிற்சிகளை செய்து வரலாம். இரண்டு மூன்று உடற்பயிற்சிகள் இணைந்து சில பயிற்சிகள் செய்யும் போது உங்கள் தசைகள் வலுப்படும். உதாரணமாக,  தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ளவும் உங்கள் கைகளை நேராக வைத்து தரையில் இருந்து மெதுவாக கால்களை உயர்த்தவும். பின்னர் மெதுவாக கால்களை கீழே இறக்கவும். கால்கள் பூமியில் படும் போது உங்கள் வயிற்று பகுதி மிகச் சுலபமாக எடுக்க தயாராகும். இது போல் செய்யவும். தரையில் படுத்து கால்களை மடக்கிக் கொள்ளவும். பாதங்கள் தரையில் ஊன்றியிருக்க வேண்டும். அப்படியே மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அப்போது உங்கள் வயிறு நன்றாக உள்ளிழுத்தபடி இருக்கும். இந்த மூச்சு விடும் பயிற்சியை செய்ய வேண்டும். இதே போல் மூச்சை உள்ளிழுத்தபடி ஐந்து விநாடிகள் இருக்கவும். மூச்சை வெளியே விடும்போது உங்கள் இடுப்புப் பகுதியை சற்று மேலே தூக்கவும். இதே போல 5 நொடிகள் இருக்கவும். பின் இயல்பு நிலைக்கு வரவும். 

fruits

தவிர, வழக்கமான மூன்று நேர உணவை விட சிறிது சிறிதாக 6 வேளை உணவு சாப்பிடும் போது இடைவேளைகளில் ஆரோக்கியமான பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவது உங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு உதவி செய்யும். காலை நேர உணவு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதனை ஆரோக்கியமான உணவாக சரிவிகித உணவாக இருக்கும் படி பார்த்துக் கொண்டால் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் சீர்படும். பச்சை குடைமிளகாய், ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப்பழம், நிலக்கடலை, முட்டை போன்றவற்றைச் சாப்பிடுங்கள். நார்ச்சத்து அதிகமான உணவை சாப்பிடுங்கள். இரும்புச்சத்து கால்சியம் மற்றும் புரதசத்து அதிகம் இருக்கும் உணவை சாப்பிடுங்கள்.  இத்தருணத்தில் நீர்ச்சத்து சீக்கிரம் குறைந்து விடுவதால் அடிக்கடி பலரும் அருந்தவேண்டும் நாள் ஒன்றிற்கு 10, 12 டம்ளர் நீர் மிகவும் அவசியமாகும். எடைகுறைப்பு கவனம் செலுத்துவதால் நீங்கள் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இவற்றை கடைபிடித்து நீங்களும் குழந்தை பிறந்த பிறகும் ஸ்லிம்மாக வலம் வரலாம்!

gowtham Wed, 09/18/2019 - 10:38
women fitness Pregnant Women நடிகைகள் சினிமா லைப்ஸ்டைல்

English Title

Cesarean baby actresses are slim!

News Order

0

Ticker

0 ஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க!

தென்னகத்தின் காஷ்மீர் என்று பெருமைக்குரிய சுற்றுலா தளமாக இருக்கிறது மூணாறு. சுற்றிலும் அழகிய மலைகள், தேயிலை தோட்டங்களின் நடுவில் வெள்ளியை உருக்கி ஊற்றிக் கொண்டிருப்பதைப் போல் கொட்டும் நீர்வீழ்ச்சிகள், துள்ளி ஓடும் புள்ளி மான்கள், வரையாடுகள், காட்டெருமைகள், காட்டு யானைகள் என வனமும், வனப்பும் சூழ்ந்த ரம்யமான பகுதியை கண்டு களிக்க புத்துணர்ச்சி பெறுவதற்காக  இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் மூணாறு வந்து  செல்கின்றனர்.

munnar


அப்படி சுற்றுலாத் தலங்களுக்கு வந்த பின் தங்கும் விடுதிகளை தேடிய அலைந்த காலம் போய், தற்போது ஆன்லைனில் விடுதிகளைப் பார்த்து, விலையை விசாரித்து  புக் செய்துவிட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் தான் அதிகம். மூணாறு அருகே குறைந்த விலையில், சொகுசான தங்கும் விடுதிகள் என ஆன்லைனில் பதிவிட்டுள்ளதைப் பார்த்து, அதன் உண்மை தன்மையை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் அறைகளைப் பதிவு செய்து விடுகின்றனர். அப்படி அறையை முன்பதிவு செய்துவிட்டு, மூணாறு வருபவர்கள், விழி பிதுங்கி நிற்கிறார்கள். 

resort


மூணாறுக்கும், தாங்கள் பதிவு செய்துள்ள விடுதிக்கும் சுமார் 50 முதல் 60 கிலோ மீட்டர் தூரம் இருப்பது அவர்களை பேரதிர்ச்சிக்கு ஆளக்குகிறது. அழகிய மலைகளையும், இயற்கை எழிலையையும் கண்டுகளிக்க நீண்ட தொலைவில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள், மூணாறுக்கு கொஞ்சமும் சம்பந்த்மேயில்லாத ஏதோ ஒரு இடத்தில் அறை எடுத்து தங்கும் அவஸ்தை அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தருவதுடன் மனஉளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறது! இப்படி சுற்றுலா பயணிகளை வலை விரித்து வலைத்தளங்களில் ஏமாற்றும் சொகுசு விடுதிகள், அழகழகான மூணாறின் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவிட்டு ஏமாற்றுகின்றன. இந்தப் புகைப்படங்களை இணையதளங்களில் பார்த்து விட்டு, அந்த விடுதிகளிலேயே தங்குவதற்கு முன்பதிவு செய்து விடுகின்றனர். இதில், வருத்தம் என்னவென்றால் தங்கியிருக்கும் இடமே மூணாறு என நம்பி, ஒரிஜினல் மூணாறை பார்க்காமலேயே பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் திரும்பிச் சென்ற கதையும் உண்டு. மூணாறு பகுதிக்கு உட்படாத குறிப்பிட்ட பகுதியின் பெயர்களை சிறிய எழுத்திலும், மூணாறை பெரிய எழுத்திலும் பொறித்துள்ள தனியார் விடுதிகள் மற்றும் கடைகள் மீது உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

admin Sat, 09/14/2019 - 12:15
Kerala's Munnar Online hotel booking travel tips online hotel booking லைப்ஸ்டைல் சுற்றுலா

English Title

becareful while booking online hotels

News Order

0

Ticker

0 உடல் எடையை பக்கவிளைவுகள் இல்லாமல் குறைப்பது எப்படி? ஸ்லிம் ரகசியம் இது தான்!

உடல் எடையைப் பற்றி கவலைப்படுவதில் இரண்டே விஷயங்களில் தாங்க ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். உங்களுடைய அதிகளவிலான உடல் எடை மரப்பணு ரீதியிலானதா இல்லை உடலில் சேர்ந்திருக்கும் கெட்ட கொழுப்புகளினாலா என்பதை மட்டும் செக் பண்ணிக்கோங்க... அது தான் ரொம்ப முக்கியம்.
அளவுக்கு அதிகமா உடல் எடை இருப்பதைத் தான் உடற்பருமன் என்கிறோம். 

weight

உடல் பருமன் ஏற்படுவதற்கான காரணங்களாக கருதப்படுவது மரபு ரீதியிலானது, அதிக அளவில் உணவுகளை உட்கொள்வது, 
உடல் உழைப்பு இன்மை, கவலை, தூக்கமின்மை, அமர்ந்த படியே இயங்கும் வாழ்க்கை முறை, 
நாளமில்லாச் சுரப்பிகளினால் ஏற்படும் பாதிப்புகள், மது, புகைப்பழக்கம், அதிகமான அளவுகளில் மருந்துகளை உட்கொள்வது, தாமதமான குழந்தைப்பேறு, உணவு மாற்றங்கள் போன்றவற்றை சொல்லலாம்.

அளவுக்கு அதிகமான எடை ஏற்பட்டால் நமது உடலில் பல்வேறு மாற்றங்களுக்கும், நோய்களுக்கும் வழிவகுக்கிறது. முக்கியமாக 
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூச்சுத்திணறல், மூட்டு வலி, முதுகு வலி, மாரடைப்பு, மார்பகப் புற்றுநோய், பித்தப்பை கற்கள், குடலிறக்கம், உறக்கச் சுவாசத்தடை, மலட்டுத் தன்மை போன்றவைகள் ஏற்பட வழிவகுக்கிறது.

weight loss

இவை தவிர சில வகையான உணவுகள் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். அந்த மாதிரியான உணவுகளை தவிர்த்து விடலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உயர்-பிரக்டோஸ் போன்ற சேர்க்கைகள் உள்ளன. இது உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி கூடுதல் எடை அளிக்கும். சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதாலும் உடல் எடை அதிகரிக்கும். அதே சமயம் முழு தானியங்கள் மற்றும் பிற உயர் ஃபைபர் உணவுகளை உண்பது, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை ஒரு நபரின் எடையை குறைக்க உதவும்.
நன்றாக கைகளை வீசி விறுவிறுப்பாக நடப்பது, நீச்சல், லிஃப்ட் பயன்படுத்துவதற்கு பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துதல் போன்ற சிறு சிறு முயற்சிகள் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்கும்.  உடல் எடையை குறைப்பதற்கும், மெலிதான உடல்வாகை கொண்டு வருவதற்கும் சந்தையில் பல மருந்து பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. ஆனால் இவை யாவுமே நிரந்தர தீர்வை கொடுக்குமா என்பது சந்தேகம் தான். மருந்துகளை நம்பாமல் ஆரோக்கியமான உணவையே மருந்தாக நினைத்து உட்கொள்ளுங்கள்.

gowtham Wed, 09/11/2019 - 18:25
weight loss healthtips உடல் எடை லைப்ஸ்டைல்

English Title

How to reduce weight without side effects? The Slim Secret This Is It!

News Order

0

Ticker

0 முடி உதிர்வதைத் தடுப்பதற்கான நிரந்தர தீர்வு இது தான்!

பாஸ்ட் புட் கலாசாரத்தில் மூழ்கி போன உணவு முறை, பதினைந்து, இருபது வயதுகளிலேயே ஏற்படுகின்ற மன அழுத்தங்கள் காரணமாக  தற்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும், தலை முடி உதிர்வு என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனால் தலைமுடி உதிரும் பிரச்சனையை அப்படியே சாதாரணமாக  எடுத்துக் கொண்டால் நாளடைவில் அது தலை வழுக்கையாக மாறி விடுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. தலை வழுக்கையாக மாறுவதற்கு பெரும்பாலும் சொல்லப்படுகிற காரணமாக மரபணுக்களாக இருந்தாலும், சுற்றுச்சூழல் மாசு, ரசாயனங்கள் அதிகளவில் கலக்கப்பட்ட ஷாம்பு  மற்றும் எண்ணெய்களை உபயோகப்படுத்துவது, உடல்ரீதியான மன உளைச்சல், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை இருக்கின்றன. 

hair loss

இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மருத்துவ குணமுள்ள எண்ணெய்களை முறையாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வழுக்கை தலையில் விரைவாக தலைமுடி வளர்ச்சியை தூண்டி, தலை முடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
அதற்கு முன்பாக, தலைமுடி எப்படி உதிர்கிறது என்பதைப் பார்ப்போம். டிஹைடிரோடெஸ்டோஸ்டெரோன் (டிஎச்டி) மற்றும் கொலாஜன் போன்றவைகள் நம் உடலில் அதிகரிப்பதால் நாம் தலை முடியை அதிகமாக இழக்க நேரிடுகிறது.  தலையில் முடி வேர்கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தையும் குறைக்கிறது. இதனால் தலைமுடி பொலிவை இழந்து, முடி மெலிதாகி பின்பு அனைத்து முடியும் இழக்க நேரிடும்.
இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மருத்துவ குணமுள்ள எண்ணெய்களை முறையாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வழுக்கை தலையில் விரைவாக தலைமுடி வளர்ச்சியை தூண்டி தலை முடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். முதல் வேலையாக, முடி உதிர்கிறதே என்று கவலைப்படுவதை நிறுத்துங்கள். அதிகளவில் கவலைப்பட்டால், அதிகளவில் முடிகள் உதிர ஆரம்பிக்கும். எப்போதும் மனதை ரிலாக்ஸாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருங்கள்.

hair loss

தேவையற்ற பதட்டத்தையும், பரபரப்பையும், டென்ஷனையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். கூடுமானவரை அதிகளவில் தண்ணீர் உட்கொள்ள துவங்குங்கள். சத்தாண உணவு பழக்கத்திற்கு மாறுங்கள். அதிகளவில் கீரைகள், கறிவேப்பிலை போன்றவைகளை உட்கொள்ள துவங்குங்கள். இந்த மாற்றங்களைக் கொண்டு வந்தால், உடனடியாக முடி உதிரும் வேகத்தைக் கட்டுப்படுத்தி படிப்படியாக முற்றிலும் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

gowtham Wed, 09/11/2019 - 17:15
hair loss healthtips முடி உதிர்வு லைப்ஸ்டைல்

English Title

This is the permanent solution to prevent hair loss!

News Order

0

Ticker

0 குழந்தைகளுக்கு என்ன சாப்பிட தரலாம்... எவ்வளவு சாப்பிட தரலாம்?

கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து போன காலக்கட்டத்தில் வாழ்கிற தாய்மார்களின் துயரம் மிகவும் பெரிது. குழந்தை எதற்காக அழுகிறது என்கிற கேள்வியில் ஆரம்பிக்கிற அன்றைய தினம், எதைச் சாப்பிடக் கொடுக்கலாம்...எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று அன்று முழுவதுமே நீள்கிறது.

childrens

அம்மாக்களின் மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பதே குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும்? என்ன உணவு கொடுக்கக் கூடாது? எது ஆரோக்கியமான உணவு என்பது தான். பெரும்பாலோனோர் கூகிள் டாக்டரை முழுதாக நம்பி விடுகிறார்கள். இன்னும் பலரோ அருகில் இருக்கும் உயர்தர மருத்துவமனைகளை முழுதாக நம்பி, கலர் கலராக டானிக்குகளை குழந்தையின் வாயில் திணிக்கிறார்கள். உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க பழகுங்கள். டானிக் குடித்து வளரும் பொம்மையாக மாற்றி விடாதீர்கள்!

குழந்தைகளுக்கு சில உணவுகளைக் கொடுக்கக் கூடாது என்ற கட்டுக்கதைகள் பல உள்ளன. ஆனால் அவற்றுள் சில உணவுகள் குழந்தைகளுக்கு உண்மையில் ஆரோக்கியத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றாகத் தான் உள்ளது.  குழந்தைகளுக்கு உணவுப் பழக்கத்தைச் சொல்லிக் கொடுப்பது அத்தனை எளிய விஷயம் கிடையாது தான். ஆனால், கொஞ்சம் முயற்சி செய்தால் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவை அறிமுகப்படுத்தலாம். 

child

குழந்தைகளுக்கு என்ன உணவு தேவை என்பதை அறிந்து கொடுக்க வேண்டியது ஒவ்வொரு அம்மாவின் கடமை. மேலும் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவு ஆரோக்கியமானதாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். குழந்தைகளுக்குச் சுவையை விரும்பும் பண்புகள் உள்ளன. ஆனால் அவற்றை உணவில் காட்டமாட்டார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன உணவு கொடுக்கிறீர்களோ அவற்றைச் சாப்பிடுவார்கள். எனவே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவைக் கொடுக்கும் பழக்கத்தைத் தொடருங்கள். குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவைப் பல வகை சத்துக்கள் நிறைந்ததாகக் கொடுங்கள். அதாவது ஊட்டச்சத்து நிறைந்து உள்ளதுள்ளது என்பதால் ஒரே உணவை அடிக்கடி கொடுக்காதீர்கள். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை மாற்றி மாற்றிக் கொடுங்கள். நீங்கள் மளிகை சாமான்களை வாங்கும் போது அதில் குழந்தைகளையும் ஈடுபடுத்துங்கள். எது சிறந்தது எதற்காக அந்த சத்து நிறைந்த பொருட்களை வாங்குகிறோம் என்று சொல்லிக் கொடுங்கள்.  குழந்தைகளுக்கு படிப்படியாக எல்லா சுவைகளையும் சொல்லிக் கொடுங்கள்.

gowtham Wed, 09/11/2019 - 15:49
childrens eating food குழந்தை லைப்ஸ்டைல்

English Title

What can children eat… how much can they eat?

News Order

0

Ticker

0 சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் சைவ உணவுகள்!

முப்பது வயதைத் தொடுவதற்குள்ளாகவே நம்மில் நிறைய பேர் இன்று ஸ்டைலாக எனக்கு சுகர் இருக்கிறது என்று சொல்லி வருகிறார்கள்.  பொதுவாக நமது உடலில் ஏற்படும் பல்வேறு விதமான பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது நமது உணவு பழக்கமும், சரியான  ஓய்வு இல்லாததும் தான். 

diabetes

வந்த பிறகு சிகிச்சைகளைத் தேடுவதை விட வருமுன் காப்பதே சிறந்தது. இருந்தாலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சில குறிப்பிட்ட சத்தான சைவ உணவுகளை உட்கொள்வதன் மூலமாக கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். 
சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க எடுத்துக் கொள்ள வேண்டிய சைவ வகை உணவுகளின் பட்டியலைப் பார்ப்போம்...
பருப்பு வகைகள்
முழு தானியங்கள்
கொட்டைகள் மற்றும் விதைகள்
பாகற்காய்,  சுரைக்காய், வெள்ளரி, சுண்டைக்காய், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், வெங்காயம்,

vegetables

காளான்கள். தக்காளி, ஆப்பிள்,நெல்லிக்காய், செர்ரி, பேரிக்காய், கொய்யா, புதினா, துளசி, கீரைகள்,கொத்தமல்லி 
மசாலா வகைகளில், இலவங்கப்பட்டை, மஞ்சள் முதலியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். வெந்தயம் மற்றும்  ஏலக்காய் போன்றவை நீரிழிவு பிரச்னைக்கான தீர்வாக கருதப்படுகிறது!

gowtham Sun, 09/08/2019 - 16:55
diabetes vegtables சர்க்கரை நோய் லைப்ஸ்டைல்

English Title

Vegetarian diets that drive out sugar!

News Order

0

Ticker

0 காது குடைய பென்சில், பேனா, பேப்பர், பட்ஸ் பயன்படுத்தறீங்களா? உங்களுக்கான அதிர்ச்சி எச்சரிக்கை!

முன்பெல்லாம் கோழி இறகை எடுத்து காதில் விட்டு குடைந்துக் கொண்டே ஆகா என்ன சுகம் என்று கிராமங்களில் சொல்வார்கள். இப்போது கோழிகளை எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கறிக்கடையில் பார்ப்பதோடு சரி என்றாகிவிட்டது. 

ear

தற்போது மக்களிடையே சுத்தம் சுகாதாரம் என்று ஸ்டைலாக பட்ஸ் எடுத்து வைத்துக் கொண்டு காது குடைகிற பழக்கம் அதிகரித்து வருகிறது. இன்னும் சிலர் கைகளில் அந்த நேரத்தில் சிக்கும் பேனா, பென்சில், பேப்பர் என்று எதையாவது எடுத்து காது குடைந்து வருகிறார்கள். இந்தியாவில் மக்களை தாக்கும் நோய்களை நாம் பட்டியலிடும் நேரத்தில் மக்களே தேடிப் போய் சிக்கிக் கொள்ளும் நோய்களின் பட்டியலை நாம் எண்ணிப் பார்க்க மறந்து விடுகிறோம். 
நமது காதில் குழாய் பகுதியில் செல்கள் உள்ளன. காதுப் பகுதி மிகவும் மிருதுவானது. அவற்றைக் கெடுக்கும் வகையில் மென்மையான அழுத்தத்தை கொடுத்தாலே காதில் வலி அதிகம் ஏற்படுகிறது மற்றும் காதுகளிலிருந்து திரவம் வடிதல் போன்றவை காணப்படும். இவை சிலருக்கு சிறிது நேரத்தில் சரியாகலாம் சிலருக்கு செவித்திறன் இழக்க நேரிடலாம். இதனால் காது அடைப்பு ஏற்படுவதால் பேனா,  பென்சில்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தும் போது ஆபத்துகள் தான் அதிகம் இருக்கின்றன. இவ்வளவு ஆபத்துகள் என்றால் அதை எவ்வாறு சுத்தம் செய்வது. 

ear buds

நாம் சுத்தம் செய்ய கவலைப்பட வேண்டாம். நாம் தலைக்கு குளிக்கும் போதோ அல்லது நமது தலை ஈரமாக இருக்கும் போதோ நம் காதுக்குள் இருக்கும் அழுக்கு இயற்கையாகவே வெளியே வந்து விடும். அல்லது அந்த மாதிரி ஈரமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் ஒரு துணியால் துடைத்தால் போதும். சில நேரங்களில் காதில் உள்ள அழுக்குகள் நாம்  உறங்கும் நேரத்தில் அதுவாகவே வெளியே வந்துவிடும். 
 ஒரு சிலருக்கு காதுகளில் அதிகமாக அழுக்குகள் சேரும். அவர்களுக்கு இந்த இரு வழிகளும் பயனளிக்காது.  அந்த சமயத்தில் கட்டாயம் மருத்துவரை அணுகி பயன்பெறலாம்.

gowtham Sun, 09/08/2019 - 15:35
ear buds ears காது லைப்ஸ்டைல்

English Title

Do you use pencil, pen, paper, butts for earphones? Shock alert for you!

News Order

0

Ticker

0 தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அவசியம் இதைத் தெரிஞ்சுக்கோங்க!

பெரும்பாலான தாய்மார்கள் குழந்தைப் பிறந்ததும், முழு அக்கறையையும் குழந்தையின் மீது செலுத்தி, அவர்களது ஆரோக்கியத்தை காக்க மறந்து போய் விடுகிறார்கள்.  தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தைகளின் அக்கறையில் மட்டுமல்ல, தன்னுடைய ஆரோக்யம் குறித்து அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். 

mother and baby

குழந்தையைப் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு குழந்தை பிறப்பின் பிறகு நிச்சயமாக கால்சியம் சத்துள்ள பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். 
குழந்தையின்  ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஆரம்ப நாட்களில் நிறைய கால்சியம் தேவைப்படும். பால் கொடுக்கும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் கால்சியம் இல்லாவிட்டால், பிற்காலத்தில் எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நாள் ஒன்றுக்கு கட்டாயம் குறைந்தபட்சமாக  1,000 மி.கி., கால்சியத்தை பால் கொடுக்கும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 

mother and baby

பால், தயிர், சீஸ், பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமான தாய்ப்பாலின் முக்கிய பகுதியாகும். எலும்புகளை வலுப்படுத்த உதவும் வைட்டமின் டி சத்துக்களையும் பால் வழங்குகிறது. புரதம் மற்றும் வைட்டமின் பி யை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பால் பொருட்கள் கால்சியத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகவும் திகழ்வதால் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

gowtham Sun, 09/08/2019 - 12:02
mother and baby breastfeeding தாய்ப்பால் லைப்ஸ்டைல்

English Title

Breastfeeding women need to know this!

News Order

0

Ticker

0 வாழைப்பழம் சாப்பிடறதுல இவ்வளவு ஆபத்தா...? மக்களே உஷார்!

மக்களிடையே பீட்சாவும், பர்கரும் ஒரு பக்கம் அதி ப்ரியமான உணவு வகைகளாக இருந்த போதிலும், ஆரோக்கியம் காப்போம் என்று மற்றொரு பக்கம் வெறும் பழங்களையும், பாதி வெந்தும், வேகாமலும் இருக்கும் காய்கறிகளையும் சாப்பிட்டு உடல் நலன் மீது இருக்கும் அக்கறையைக் காட்டுபவர்களும் இருக்கிறார்கள். இதில், பழங்களிலும், காய்கறிகளிலும் இருக்கும் மருத்துவ குணங்களைத் தெரிந்துக் கொண்டு, அவற்றின் தன்மைக்கு ஏற்ப அவற்றைச் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

green banana

குறிப்பாக எல்லா வகையான பழங்களும் நமக்கு நன்மை தரும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சில பழங்கள் மருத்துவ தன்மை வாய்ந்ததாக இருக்கும். இன்னும் வேறு சில பழங்கள் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்கும். அந்த வரிசையில் தீமை தரக்கூடிய பழங்களும் உள்ளன.  பொதுவாக பச்சை, மஞ்சள் என்று காணப்படுகின்ற வாழைப்பழங்களில், பச்சை நிற பழமானது கசப்புத் தன்மை கொண்டதாக காணப்படும். இவற்றில் குறைந்த அளவு சர்க்கரை உள்ளதால் இது ஜீரண சக்தியை அதிகரிக்க பயன்படும்.

banana

மஞ்சள் நிறத்தில் உள்ள வாழைப் பழங்கள் மிகவும் மென்மையாகவும், அதிக சுவை கொண்டதாகவும், இனிப்பாகவும் இருக்கும். குறிப்பாக இதில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. அதே நேரத்தில் இதில் அதிக அளவில் சர்க்கரையும்  உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதனை தவிர்த்து விடவும். சிவப்பு நிறம் வாழைப்பழங்களைச் சாப்பிடுவதால் நமக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கும். இந்த வகை பழங்கள் மிகவும் உடலுக்கு நன்மை தரும் என்றும் இதில் பல வகையான சத்துக்களும் உள்ளன என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே இந்த வகை பழங்கள் உடலுக்கு நல்லது. ஆண்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான சில முக்கிய தாம்பத்திய பிரச்சினைகள் தீர்ந்துவிடும்

banana

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும் இது இரத்த அழுத்தம், மன அழுத்தம், நெஞ்சு எரிச்சல், அல்சர் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. இதில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்தத்தின் அளவையும் அதிகரிக்கிறது. என்னதான் சத்தான உணவாக இருந்தாலும் இதை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா என்ற விவாதம் இப்போது வரை இருந்து வருகிறது. பல்வேறு ஆதாரங்களில் வாழைப்பழங்களில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். வாழைப்பழங்கள் தற்காலிகமாக உத்தரவை அளித்தாலும் பின்னர் தூக்கத்தை வர வைக்கின்றன. வாழைப்பழங்களில் இயற்கையில் அமிலங்கள் இருக்கின்றன. எனவே இது வயிற்று பிரச்சனைக்கு காரணமாக அமையலாம் என்றும் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை எப்போதுமே சாப்பிடாமல் தவிர்த்தல் நல்லது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இனி வெறும் வயிற்றில் எப்போதுமே வாழைப்பழத்தை சாப்பிடாதீர்கள்!

gowtham Wed, 09/04/2019 - 14:15
banana dangerside of banana Healthy Food வாழைப்பழம் லைப்ஸ்டைல் உணவு

English Title

The banana is so dangerous ... People are on the alert!

News Order

0

Ticker

0 எதிர்கால வசந்தத்திற்கான வழி

ஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார், 
‘மகனே! இது நமது முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி வரும் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால், நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில், நான் இதனை விற்கப் போகிறேன், எவ்வளவு விலைக்கு எடுத்துக் கொள்வீர்கள் என்று கேட்டுப்பார் என்றார்.
மகனும் தந்தை கூறியதைக் கேட்டுவிட்டு, கடைத் தெருவிற்கு சென்று, கடிகாரக் கடையில், ‘இந்த கடிகாரத்திற்கான விலையாக எவ்வளவு தருவீர்கள்?’ என்று கேட்டு விட்டு தந்தையிடம் வந்தான்.
‘தந்தையே! இந்த கைக்கடிகாரம் மிகவும் பழையதாக இருப்பதால் இதற்கு 20 ரூபாய்களுக்கு மேல் தரமுடியாது என்று கூறிவிட்டார்கள்’ என்றான்.

watch

தந்தை முகமலர்ச்சியுடன் மகனைப் பார்த்து, கொஞ்சம் தள்ளி இருக்கும் பாரம்பரியமான புராதன பொருட்களை விற்கும் கடைக்குச் சென்று இதைக் காட்டிவிட்டு விலையை கேட்டு வா’ என்றார்.
புராதன பொருட்களை விற்கும் கடையில் இப்போது கடைக்காரர் மிகவும் மலர்ச்சியுடன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இதற்கு  5000 ரூபாய்கள் வரையில் தருகிறேன். வேறு யாரிடமும் இதை விற்க வேண்டாம் என்றார் கடைக்காரர்.
மகனும் நடந்த விஷயங்களை அப்படியே தந்தையிடம் வந்து கூறினான். 
தந்தை, அந்த விலையிலும் திருப்தியடையாமல், மகனிடம் இப்போது நீ அருகிலிருக்கும் மியூசிஸத்தின் நூதனசாலைக்குச் சென்று இதன் சரியான விலையை கேட்டுப் பார் என்றார். மகனுக்கு இப்போது ஆர்வம் அதிகமாகிவிட்டது. 5000 ரூபாய்க்கும் மேலாகவா இந்த பழைய கைக்கடிகாரத்தை வாங்கிக் கொள்ளப் போகிறார்கள் என்று எண்ணியபடியே நூதனசாலைக்குச் சென்று இதன் விலையைக் கேட்டான்.

father and son

அவர்கள் அந்த கைக்கடிகாரத்தை பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து பரிசோதித்து விட்டு, எங்களால் இந்த கைக்கடிகாரத்தில் ஒரு லட்சம் ரூபாய்கள் வரையில் தர முடியும் என்றனர்.
மகன் மிகவும் சந்தோஷமாக வீட்டிற்கு ஓடோடி வந்து தந்தையிடம் நூதன சாலையில் சொன்ன விலையை சொன்னான்.
இப்பொழுது தந்தையின் முகத்தில் முழு திருப்தி தெரிந்தது. 
மகனைப் பார்த்து, ‘மகனே! சரியான இடமே உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும், எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்தி விட்டு, யாருமே உன்னை  மதிக்கவில்லை என்று கோபப்படுவதில் எப்பொழுதுமே ஒரு அர்த்தமும் இல்லை. இதைப் புரிந்துக் கொண்டால் உன் எதிர்கால வாழ்க்கை என்றுமே வசந்தம் தான்’ என்றார்.

உனது அந்தஸ்தை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்.உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே.இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்.

gowtham Fri, 08/30/2019 - 12:30
father and son Story  தந்தை,மகன் லைப்ஸ்டைல்

English Title

Way for the future spring

News Order

0

Ticker

0 கர்வம் தொலைத்த டால்ஸ்டாய் tolstoy

யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ, மதிப்பு மிக்கவர் என்றோ, அறிவானவர் என்றோ, அழகானவர் என்றோ உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம். இந்த பூமியில் ஒவ்வொரு மனுஷனுமே சிறப்புக்கு உரியவர் தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே.  வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வேர்வை சொட்ட நிலத்தில் உழைத்து களைப்பவர்கள் (ஆண் பெண்) யாவருக்கும், எல்லோருக்கும் உள்ளதைப் போல், சுயமரியாதை,கோபம், வலி, மகிழ்ச்சி, பசி, உறக்கம், இழிசொல்லின் வலி, புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு.மேற்குறிப்பிட்ட இவர்களை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை., சொல்லால் , பார்வையால், செயலால், புறக்கணிப்பால் நம்பிக்கை துரோகத்தால், ஏளனச் சிரிப்பால் நெட்டித் தள்ளி வதை செய்து விடாதீர்கள். .

tolstoy

உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள். டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா..? என்று கேட்டாள். அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார். மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறி விட்டுக் கிளம்பினாள். அதைக் கேட்ட டால்ஸ்டாய், 
'உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று’ என்றார். அதற்கு அந்தச் சிறுமி, நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் மேரியுடன் விளையாடினேன் என்று’ என்றாள். உலகப் புகழ் பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்கு அவர் வெட்கப்பட்டார்.. ஆம்.,நண்பர்களே... மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம் தான். உயர்ந்தவர், தாழ்ந்தவர்,படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற நிலை மாற வேண்டும்.. சமத்துவம் நிலவ வேண்டும் என்றால் மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதை நம்மிடம் இருந்து தொடங்குவோம். இனி ஒரு உலகம் அமைப்போம். சக மனிதர்களை மதிப்போம். மனிதனாக வாழ்வோம்!

gowtham Fri, 08/30/2019 - 10:54
tolstoy Story டால்ஸ்டாய் லைப்ஸ்டைல்

English Title

Tolstoy lost pride

News Order

0

Ticker

0 
தலைமுடி உதிர்வு

தலைமுடிகள்  வேர் வேராக உதிர்வதை தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள்!

வீட்டில் எங்கு பார்த்தாலும் முடிகள் கிடக்கின்றன. தலைவாரும் போதெல்லாம் அப்படியே வேரோடு கொத்து கொத்தாக முடிகள் உதிர்கின்றன. தலை வாருவதற்கே பயமாக இருக்கிறது என்கிற கவலை ஒவ்வொரு பதின் ...


 நோய்

தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது!

எதைச் சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்கிற நிலைக்கு தான், இன்று பெரும்பான்மையான தமிழக மக்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். தெருவிற்கு நான்கைந்து மருத்துவமனைகள் திடீர் திடீரென முளைத்து காச...


 பிஸ்கட்

எமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்!

காலையில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் போது, அவர்களுக்கு என்ன ஸ்நாக்ஸ் வைத்து அனுப்புவது என்பது தான் பலரது வீட்டின் பரபரப்பாக இருக்கும். என்ன தான் நாம் ஆரோக்கியமான பழங்களையோ, காய்...


நரி

நரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது. தனது நீளமான நிழலைப் பார்...


ஆவாரம் பூக்கள்

ஆரோக்கியத்தைக் காக்கும் ஆவாரம் பூக்கள்!

பூக்களில் எத்தனையோ வகைகள் உண்டு. ஆனால், நமக்குத் தெரிந்த மல்லி, கனகாம்பரம், முல்லை, சாமந்தியைத் தவிர மற்றப் பூக்களை எல்லாம் மறந்து விட்டோம். யாராவது மூச்சு விடாமல், நூறு பூக்களின் ...


ஹோமை வியாரவல்லா

உலகின் மிகச் சிறந்த கேமிரா எது? இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் நினைவலைகள்!

இந்த உலகின் மிகச் சிறந்த கேமிரா எது? இதற்கு விடையைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால், இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் யார் என்று பார்ப்போம். ஹோமை வியாரவல்லா.... இந்தியாவின் முதல...


குழந்தை

குழந்தைகளிடம் ஸ்மார்ட் போனை கொடுக்கறீங்களா... உஷார்!

இன்றைய தலைமுறை குழந்தைகள் ஒரு பக்கம் அறிவியல் வரத்தோடு வளர்ந்து வந்தாலும், இன்னொரு வகையில் சாபத்தோடு வளர்வதாகவே தோன்றுகிறது. நீச்சல், நடைபயிற்சி, புழுதி பறக்கும் தெருக்களில் விளையா...


சந்தோஷம்

கவலைக்கான உண்மையான மருந்து

அந்த நகரின் புகழ் பெற்ற மருத்துவரான இக்பாலிடம் அவசர அவசரமாக நோயாளி ஒருவர் வந்தார்.  தனக்கு அதிக சோர்வாக இருக்கிறது. தலைச்சுற்றுகிறது. இரவில் நீண்ட நேரமாகியும் தூக்கமே வருவதில்லை ...


தலையில் பூ வைத்தால்

இப்படியெல்லாம் தலையில் பூ வைத்தால், தலைமுடி வளராது... எச்சரிக்கை!

பெண்களின் கேசத்திற்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல்லை தவறாது பூக்களைச் சூடிக் கொள்வதால் தான் மணமுண்டா என்று இதிகாச காலங்களிலேயே சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. ஆனால், பூக்களை தலையில் ...

2018 TopTamilNews. All rights reserved.