kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

life style

paneer cutlet

சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு பன்னீர் கட்லெட்!

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெண்ணெயில் துருவிய பன்னீரை போட்டு சிவந்து விடாமல், மணம் வரும் வரை  வதக்கி வைத்துக் கொள்ளவும்

 
காய்கறி

காய்கறி வாங்கும் போது இதையெல்லாம் கவனத்துல வெச்சுக்கோங்க...

காய்கறியை வாங்குவதற்கும் ஒரு பக்குவம் இருக்கு. அதுவும், இது பற்றி தெரியாதவங்க காய்கறி வாங்கப் போனா, கடைக்காரன், கடையில இருக்கிற முற்றினது,சொத்தையானதுன்னு பொறுக்கிப் போட்டு பில் போட...beauty tips

உங்கள் முகம் பொலிவுடன் இருக்க வேண்டுமா...அசத்தலான 5 ஐடியா!

கோடை காலத்தில் பொதுவாகவே நமது சருமம் பொலிவிழந்து காணப்படும். அதை சரிசெய்வதற்காக அடிக்கடி பார்லருக்கு போக முடியாது. அப்படி போக நேரம் இருந்தாலும் கூடுதல் செலவு பிடிக்கும். இழந்த பொலி...


ப்ரண்ட்ஸ் - பேமிலி

இதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்!

நண்பர்கள்,அறிமுகமில்லாத பிற நண்பர்கள் சந்திக்கும்போது,நீங்கள் யாரோ ஒருவரைப் பற்றி கேலியும் கிண்டலுமாக ஒரு உரையாடலைத் தொடங்குகிறீர்கள். உடனிருப்பவர்கள் அதை ரசிக்கும் மனநிலையில் இல்ல...


train

100 வருடம் முன்பு ரயில் பயணம் எப்படி இருந்தது தெரியுமா?!

தமிழ்நாட்டில் அல்லது தென்னிந்தியாவில் முதல் ரயில் விடப்பட்டது,சென்னை ராயபுரத்துக்கும் ஆற்காட்டுக்கும் இடையேதான்.அது நடந்தது 1856-ல்.அதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கழித்...கோப்புப்படம்

இந்த கீரையின் பூவில் இவ்வளவு பொரியல் சாப்பிட்டால் எவ்வளவு பலன்!

சாப்பிட்டுவிட்டு சரக்கடித்தால் அலர்ஜியாகி உடம்பெல்லாம் தடிப்பு தடிப்பா வந்திரும்னு சொல்றதால சாப்பிடறதே இல்லை என்று விஞ்ஞான விளக்கம் கொடுப்பவர்களும் இங்கே இருக்கிறார்கள்


beer

பீர் சாப்பிட்டுட்டு சரக்கடிக்கலாமா! சரக்கடிச்சதுக்கு அப்பறம் பீர் சாப்பிடலாமா!?

நாளுக்கு நாள் வெய்யிலின் அளவு கூடிக்கொண்டே போகிறது என்பதை, பகல் நேரத்தில் வெளியில் போகும்போது நீங்களே உணர்ந்திருப்பீர்கள்

மலச்சிக்கல், செரிமான பிரச்சினையா! உடனடியாக சரி செய்ய இதைச் செய்து பாருங்கள்!

சிலர் ஜிம்முக்கு போகாமலே செம ஃபிட்டாக இருப்பார்கள். அவர்களை அறியாமலே தொப்பை போட்டிருக்கும். அதுகூட அவர்கள் கவனித்திருக்க மாட்டார்கள். நீண்ட இடைவெளிக்கு அப்புறம் சந்திக்கும் நண்பர்கள் யாராவது ‘என்ன மச்சி...லைட்டா தொப்பை போட்டிருச்சு போல !?’ என்று கேட்ட பிறகுதான் சம்பந்தப்பட்ட நபருக்கே அது தெரிய வரும்.

Constipation 5

பொதுவாக இந்த மாதிரி திடீர் தொப்பைகளுக்கு காரணம், வயிற்றில் தேவையில்லாத கொழுப்பு சேர்ந்ததால் அல்ல. கண்ணை மூடிக்கொண்டு ஒரு ஃபிளாஷ் பேக் ஓடவிட்டுப் பாருங்கள். கடந்த சில மாதங்களாக நீங்கள் அதிகம் சாப்பிட்ட உணவுகளை வரிசைப் படுத்திப் பார்த்தால் உங்களுக்கே தெரிந்து விடும். வழக்கத்திற்கு மாறான உணவுகள் அதிகம் சாப்பிட்டிருப்பீர்கள். அதிலும் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் நேரம் கடந்த நேரங்களில் ஹெவியான உணவுகளை சாப்பிட்டிருப்பீர்கள்.

eat

அந்த மாதியான நாட்களில் அடுத்த நாளிலிருந்து நேரத்திற்கு சாப்பிட ஆரம்பித்திருப்பீர்கள். இந்த உணவு பழக்கத்தில் மாற்றங்கள் நிகழும் போது வயிறு உப்பியது போல் காணப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் நான் வெஜ் அயிட்டம் சாப்பிட்டிருந்தால் சொல்லவே வேண்டாம். இப்போதுள்ள அவசர உலகத்தில் பலரும் சாப்பிடும்போது நிதானமாக மென்று ,ரசித்து உமிழ் நீரோடு சேர்த்து சாப்பிடுவதில்லை!

eat

இன்னும் சிலர் சாப்பிடும் போது பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள். சிலர் மாத்திரை விழுங்குற மாதிரி சாப்பாட்டுக்கு நடுவே அதிகளவில் தண்ணீரையும் குடிப்பார்கள். இதுதான் இளந்தொப்பை விழ காரணம். இப்படியான பழக்கம் உள்ளவர்களுக்கு முதலில் சாப்பிட்ட உணவு முழுவதுமாக செரிமானம் ஆகாது. அப்படி செரிமானம் ஆகாமல் போனால், உடலில் சேர்ந்த கழிவுகள் முழுவதுமாக வெளியேறாது.

அப்படி வெளியேறாத கழிவுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து இரைப்பையின் ஒரு பகுதியில் சேர்ந்துவிடும். இதனால் முன்பு போல் பசி இருக்காது. இதனால் வயிறு உப்பலாக காணப்படும். இதைத்தான் கேஸ்டிக் ப்ராப்ளம் என்று சொல்வார்கள். இந்த மாதியான உடல் கோளாறு உள்ளவர்கள் அலோபதி மருத்துவத்திற்கு போக வேண்டிய அவசியமில்லை!

Gooseberry

பெரிய நெல்லிக்காய் 12. உண்மையிலேயே பெரிய நெல்லிக்காயாக இருக்கிற மாதிரி வாங்கிக்கொள்ளுங்கள். காலையில் இந்த நெல்லிக்காயில் உள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு மிக்சியில் முதலில் தண்ணீர் சேர்க்காமல் பேஸ்ட் மாதிரி அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதோடு அரைத்த பேஸ்ட்டும் தண்ணீரும் சேர்ந்து ஒரு லிட்டர் அளவு வருகிற மாதிரி தண்ணீர் சேர்த்து மறுபடியும் அரைத்து ஜூஸ் மாதிரி வந்ததும் எடுத்து அப்படியே குடிக்க வேண்டும். உப்பு சேர்க்க வேண்டாம். குடிக்க கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். அப்படியே சாப்பிட்டால் நல்ல பலன் இருக்கும்.

Gooseberry 1

அவசியம் உப்பு சேர்த்தால்தான் குடிக்க முடியும் என்று நினைத்தால் சிறிதளவு உப்பு சேர்த்துக்கலாம். முக்கியமான இரண்டு கண்டிஷன் - இந்த நெல்லிக்காய் ஜூஸை வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும். அதுக்கப்புறம் இதை சாப்பிடும் நாட்களில் பிற்பகல் இரண்டு மணிவரை வீட்டைவிட்டு வெளியில் போகிற வேலை இருந்தால் அந்த வேலையை, அதற்கப்புறம் இருக்கிற மாதிரி பார்த்துக்கங்க. இல்லை,ஓய்வாக இருக்கிற நாட்களில் இதை செய்து பாருங்க.

இந்த பிரச்சினை ரொம்ப நாளாவே இருக்கென்று  சொன்னால் தொடர்ந்து இரண்டு மூன்று வாரங்களாவது குடிக்க வேண்டியிருக்கும். இப்படி செய்வதன் மூலம் உடலிலுள்ள மொத்த கழிவுகளும் வெளியேறிவிடும். காற்றில் பறப்பது போல் உணர்வீங்க!

newsdesk Fri, 03/01/2019 - 18:30
Constipation digestive problem Gooseberry Gooseberry juice Health tips life style Constipation லைப்ஸ்டைல் ஆரோக்கியம்

English Title

Constipation, digestive problem! Do this right to fix it !

News Order

0

Ticker

0 
sandi keerai

இந்த கிளுகிளு கீரையை சாப்பிட்டால் , வயாகராவே வேண்டாம்!

பொதுவாகவே இந்த இலைகளில் வைட்டமின் ‘ஏ’ ‘தையாமின்’ ‘ரிபோபிளவின்’ வைட்டமின் ‘சி’ ஆகியவை உள்ளன. மூட்டு வலிக்கு இது மிகச்சிறந்த மருந்து. பர்ஃபார்மென்ஸ் சரியில்லாத ஆன்களை மூட்டுச்செத்தவன...


athalakkai

நீரிழிவு நோய்க்கு இந்தக்  காயை ட்ரை பண்ணிப் பார்த்திருக்கீங்களா!?

குழந்தையின் சுண்டு விரலளவே இருக்கும் அதலைக்காயை உப்புச்சேர்த்து வேகவைத்தோ,அல்லது மோரில் ஊறவைத்தோஎடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு,அதை வெய்யிலில் உலர்த்தி வைத்துக் கொண்டால் வருடம் முழ...


banana

இந்த விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களின் ஆணுறுப்பின் நீளம் அதிகமாக இருக்குமாம்!

சாமுத்திரிகா லட்சணம் என்பது நமது முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்ட அற்புதமான கலையாகும்

பழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா?

சீமந்தம், கோவில், கல்யாணம், நவராத்திரிகளுக்கு கிஃப்டா வந்த வளையல் சில சமயத்தில் நம்ம கைக்கு சேராது. அதை தூக்கிபோடவும் மனசு வராம மூட்டைக்கட்டி வச்சிருப்போம். அதேப்போல, நம்மக்கிட்ட இருக்கும் பழசாகிப்போன வளையல்கள், செட் வளையலில் சிலது உடைய மிச்சம் மீதி என மூட்டைல வெயிட் ஏறிக்கிட்டே போகுமே தவிர, தூக்கி போட மனசு வராது. அப்படி தூக்கி போட்டாலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புன்னு இப்பலாம் குரல் கேக்குது. அந்த வளையல்களை என்ன செய்யலாம்?!

விதவிதமான மாலைகள் செய்யலாம். ஃப்ளவர் வாஸ், பென் ஸ்டேண்ட், ஸ்பூன் கத்தி ஸ்டேண்ட்ன்னு செஞ்சு அசத்தலாம். எங்க வீட்டில் மிச்சம் மீதி வளையலை வச்சு வாசப்படிக்கு தோரணம் செஞ்சு போட்டிருக்கேன். நல்லா இருக்கான்னு பார்த்து சொல்லுங்க. 

தேவையான பொருட்கள்: 

பழைய மெட்டல் வளையல்
உல்லன் நூல் இல்லன்னா சில்க் த்ரெட் நூல்
விருப்பத்துக்கேற்ப மணிகள்.

செய்முறை: 


மெட்டல் வளையலில் க்ளூவை தடவி உல்லன் நூலை சுத்திக்கிட்டு வரணும்.

bangle


இப்படியே எல்லா வளையல்களிலும் நூல் சுத்திக்கணும்..

bang


ரெண்டு வளையல்களை நூல் கொண்டு கட்டிக்கணும்...

bang


இப்படியே, நிலை வாசப்படி அளவுக்கு வருமாறு எல்லா வளையல்களையும் கட்டிக்கணும்...

bang


நுனியில் சலங்கை கட்டி வீட்டிலிருக்கும் மணிகளை  இஷ்டம்போல கோர்த்துக்கிட்டேன்...’

bang


இரண்டு வளையல்களை சேர்த்து கட்டிய நூலில் மணிகளை சேர்த்து கட்டிடணும்...

bang


இப்படியே எல்லா வளையல்களுக்கிடையேயும் மணிகளை கோர்த்துக்கணும்...

bang


கடைசி வளையல்களில்  உல்லன் நூலில் மணிகளை கோர்த்து கட்டி ஆணியில் மாட்ட வசதியாய் கொஞ்சம் நூல் விட்டுக்கணும்.

bnag


நிலைவாசப்படில மாட்டியாச்சு! அழகா இருக்கா இல்லியான்னு நீங்கதான் சொல்லணும்.  பதில் சொல்லுவீங்கதானே?

bang

 

manikkodimohan Wed, 02/13/2019 - 14:35
women bangles bangles work art life style bangle லைப்ஸ்டைல் பெண்ணுலகம்

English Title

how to make bangles at home

News Order

0 உங்க மகள் பூப்பெய்தி விட்டாளா? இந்த 10 உணவுகளை கண்டிப்பாக கொடுங்க... உடல் ஆரோக்கியமும் மூளைத் திறனும் அதிகரிக்கும்!

ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையில் உடல் ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது பூப்பெய்தும் நிகழ்வுதான். விளையாட்டுத்தனமாக துள்ளித் திரிந்த ஒரு குழந்தை, முதிர்ந்த பெண்ணாகத் தன்னை உருமாற்றிக் கொள்வதற்கான தொடக்கப்புள்ளிதான் பூப்பெய்தும் நிகழ்வு. அதனால் 'பெண் குழந்தைகள் பூப்பெய்தும்போது அவர்கள் உணவு விஷயத்திலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்' என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

"பூப்பெய்திய பெண் குழந்தைகளின் விஷயத்தில் முதலில் கண்காணிக்க வேண்டியது உடல் எடையைத்தான். பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் 'சத்துள்ள உணவாகச் சாப்பிட வேண்டும்' என்று நினைத்துக் கெட்ட கொழுப்பு, கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளை அளவுக்கு மீறிச் சாப்பிடக்கொடுக்கிறார்கள். இதனால் சரியான எடையைப் பராமரிக்க முடியாமல், உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் எடை அதிகரிப்பதால், மாதவிலக்குத் தள்ளிப்போவது, தைராய்டு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

மேலும் உடல் பருமனால் கருமுட்டை வளர்ச்சிக்குத் தேவையான ஃபாலிக்கில் ஸ்டிமுலேட்டிங் (Follicle Stimulating) மற்றும் லியூட்டினைஸிங் (Luteinizing) என்ற இரு ஹார்மோன்களும் பாதிக்கப்படும். இந்த இரண்டு ஹார்மோன்களும் பாதிக்கப்படுவதால் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் (PCOS) உருவாகி, பிற்காலத்தில் தாய்மை அடைவதும் கேள்விக்குறியாகும்.

எனவே, ஒரு பெண் குழந்தை பூப்பெய்தியதும் உடலுக்குத் தேவையான அளவு மற்றும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டியவது அவசியம்" என்கிறார் பிரபல சித்த மருத்துவர்.

பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள் குறித்தும் அவரே விளக்குகிறார்.

ulunthu

1. கறுப்பு உளுந்து - தோல் நீக்காமல் கறூப்பு உளுந்தில் வடை, களி செய்தும், சத்துமாவாகப் பொடித்தும் சாப்பிடலாம். சத்துமாவு மற்றும் களி தயாரிப்பதற்குக் கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும். பின் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம்.

varagu

அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகள் வலுவாகவும் மற்றும் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஆகிய ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் கறுப்பு உளுந்து உதவும்.

 

oil

2. நல்லெண்ணெய் - ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் செயல்பாட்டுக்கு நல்ல கொழுப்பு மிகவும் அவசியம். நல்லெண்ணெய்யில் இருந்து கிடைக்கும் கொழுப்பு, நல்ல கொழுப்பு வகையைச் சேர்ந்தது. எனவே, உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

egg

3. நாட்டு முட்டை - பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும். எந்த முட்டையையும் சமைக்காமல் சாப்பிடக் கூடாது.

food

4. கம்பு - வறுத்த கம்பு தானியத்தைப் பொடித்து, கூழாகவோ அல்லது களியாகவோ சமைத்துச் சாப்பிடலாம். எலும்புகள் வலுப்பெறக் கம்பு உறுதுணை புரியும்.

food

5. பொட்டுக் கடலை - பொட்டுக்கடலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடித்து நாட்டுச் சர்க்கரைச் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். இதுவும் எலும்பை வலுப்படுத்த உதவும்.

nonveg

6. அசைவ உணவுகள் - மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

green

 

7. கீரை வகைகள் - மாதவிலக்கு நாள்களில் ரத்தப்போக்கு ஏற்படுவதால், சிலருக்கு ரத்தச்சோகை வர வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்துக்கு 3 முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

8. பாகற்காய், சுண்டைக்காய் - சில பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். மேலும் உடலில் ரத்தத்தின் அளவும் குறைய நேரிடும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம். 
உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது. மருத்துவரின் ஆலோசனையுடன் நாக்குப் பூச்சி மாத்திரைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது.

vegetable

9. சத்து மாவு உருண்டை - கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை மாதத்திற்கு 3 நாள்கள் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாள்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம்.

 

kezhvaragu

10. கொண்டைக் கடலை - கருப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலையை வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

food

சில பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்திய அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு மாதவிலக்கு வராமல் இருக்கும். இதனால் பெற்றோர் பதற்றம் அடையத் தேவையில்லை.

சத்தான உணவுகளைக் கொடுக்கும்போது மாதவிடாய் சீராகும். சில பெற்றோர் பொறுமையாக இல்லாமல், குழந்தைகளுக்குத் தேவையற்ற மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள். இதன் விளைவாக ஹார்மோன்களின் செயல்பாடு குறைந்துவிடும் அல்லது அதிகரித்துவிடும்.

manikkodimohan Sat, 02/09/2019 - 15:00
Menstrual Cycle life style menopause women puberty food food லைப்ஸ்டைல் பெண்ணுலகம்

English Title

healthy eating for the menopause

News Order

0 
kadalpaasi

ரத்தசோகையை போக்கி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் ஜிகர்தண்டா (கடல் பாசி) அல்வா

சுவையான குளிர்பானம் என பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கும் மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டாவில் ரத்தசோகையை போக்கி தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பது உள்பட பல்வேறு மருத்துக் குணங்கள் உள்ளன...


jigarthanda

ஜில் ஜில் ஜிகர்தண்டாவை தினமும் சாப்பிட்டு வந்தா என்னென்ன அற்புதங்கள் உடலுக்குள் நடக்கிறது தெரியுமா?

கடல் உணவுகள், தமிழகத்தின் கடற்கரையோர மக்களின் அன்றாட உணவாகவும், பிற பகுதி மக்களின் தேவைக்கேற்ற உணவாகவும் திகழ்கிறது.2018 TopTamilNews. All rights reserved.