• February
    17
    Monday

Main Area

Main



பின்னாடி பேசுறது ரொம்ப அபத்தம்! பாஜகவை வெளுத்துவாங்கும் குட்டிக் கதை பாடல்!! 

குட்டி கதை
குட்டி கதை

பிகில் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துவருகிறார். இவர்களுடன் சாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசைமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கர்நாடகாவில் நடந்துமுடிந்த நிலையில் அண்மையில் நெய்வேலியில் நடைபெற்றது. இதற்கிடையில் பிகில் பட வரிஏய்ப்பு செய்ததாக கூறி விஜய் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரியினர் சோதனை நடத்தினார்.  மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில்  அங்கு சென்ற வருமான வரித்துறையினர்  விஜய்யிடம்  விசாரணை நடத்தினர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின் தொடர்ந்து நடைபெற்றது. 

Kutti Story

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் காதலர் தினத்தையொட்டி இன்று மாலை வெளியானது. ஒரு குட்டிக் கதை என தொடங்கும் இந்த பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாடலின் நடுவே  Dont be the person spreading hatred என்ற ஒரு வரி வருகிறது.  அதாவது வெறுப்பை பரப்பும் நபராக இருக்க வேண்டாம் என்ற அர்த்தத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வரி வரும்போது திரையில் ஒருவர் அரக்கன் போல கொம்பு முளைத்தபடி தலைவன் ஒருவன் மேடையில் பேசுகிறார். மேடைக்கு கீழே பல தொண்டர் அமர்ந்திருக்கின்றனர். அனைவரும் காவி உடை அணிந்திருப்பது போல தத்ரூபமாக காட்சியமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பின்னாடி பேசுறது ரொம்ப கிராப்பி என்ற வரிகளும் இடம்பெறுகின்றனர்.  இதிலிருந்து நடிகர் விஜய் பாஜகவை குறிவைத்துதான் இதனை சூசனமாக விளக்குகிறார் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுவருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.