• February
    25
    Tuesday

Main Area

Main



கரடுமுரடு சாலைகளுக்கான அதிசிறந்த பைக்...கே.டி.எம் அட்வென்ச்சர் 390 இந்தியாவில் அறிமுகம்!

ktm
ktm

மும்பை: கே.டி.எம். நிறுவனத்தின் அட்வென்ச்சர் 390 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

கே.டி.எம் நிறுவன பைக்குகள் மீது இந்திய இளைஞர்களுக்கு இருக்கும் காதல் சொல்லி மாளாதது. அவ்வளவு ரைடிங் வெறி கே.டி.எம் பைக்குகளை பார்த்தாலே பற்றிக் கொள்ளும். ஆஸ்திரியாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுனமான கே.டி.எம் தனது அட்வென்ச்சர் 390 மாடல் பைக்கை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் ரூ. 2.99 லட்சம் ஆகும். மேலும் இந்த பைக்கை வாங்க வேண்டுமெனில் முன்பதிவு கட்டணமாக ரூ. 10,000 செலுத்த வேண்டும்.

கே.டி.எம் அட்வென்ச்சர் 390 சிறப்பம்சங்கள்:

-43 பி.ஹெச்.பி பவர்,

-37 என்.எம். டார்க் செயல்திறன்

-6 ஸ்பீடு கியர்பாக்ஸ்

-டிரெலிஸ் சேசிஸ்

-முன்புறம் 170 எம்.எம் சஸ்பென்ஷன்

-பின்புறம் 177 எம்.எம். மோனோஷாக் யூனிட்

-200 எம்.எம் கிரவுண்ட் கிளியரன்ஸ்

-நீண்ட வீல்பேஸ்

-நீட்டிக்கப்பட்ட விண்ட்ஷீல்டு

-என்ஜினை பாதுகாக்கும் பாஷ் பிளேட்

-கார்னரிங் ஏ.பி.எஸ்.,

-இருவழி குயிக் ஷிஃப்டர்

-கே.டி.எம். மை ரைடு ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி

-முழுமையான டி.எஃப்.டி. கலர் டிஸ்பிளே

இந்த புதிய அட்வென்ச்சர் 390 பைக்கில் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் 373சிசி, DOHC சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கரடுமுரடு சாலைகளுக்கு ஏற்ற வகையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.