• April
    05
    Sunday

Main Area

Main



இந்தியாவின் பொருளாதார மந்தநிலை தற்காலிகம்தான்.... முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்... பன்னாட்டு நிதியம் தலைவர் நம்பிக்கை

கிறிஸ்டலினா
கிறிஸ்டலினா

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்ற மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பன்னாட்டு நிதியத்தின் (ஐ.எம்.எப்.) தலைவர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா கலந்து கொண்டுள்ளார். அந்த மாநாட்டில் அவர் பேசுகையில் கூறியதாவது: 2019 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2010 ஜனவரியில் உலக நிலவரம் நல்ல முன்னேற்றமான இடத்தில் உள்ளது.

பன்னாட்டு நிதியம்

அமெரிக்கா-சீனா இடையே முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதால் அந்த இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக போர் சூழ்நிலை தணிந்தது. இதுவும்  உலக நிலவரம் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அதேசமயம் 3.3 சதவீத வளர்ச்சி என்பது உலக பொருளாதாரத்துக்கு அருமையானது அல்ல.

இந்திய பொருளாதார வளர்ச்சி

வளர்ந்து வரும் நாடுகளும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டு வருகின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை நாங்கள் குறைத்தோம். ஆனால் அது தற்காலிகமானது என நாங்கள் நம்புகிறோம். இந்தியாவின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.