• November
    12
    Tuesday

Main Area

Main



கோடநாடு விவகாரத்தில் ஒரு கோடி மான நஷ்டஈடு கோரிய வழக்கு - முதல்வர் பழனிசாமி பதிலளிக்க உத்தரவு

EPS
EPS

ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்க கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் அளித்த மனுவுக்கு ஜூலை 4 ஆம் தேதிக்குள் முதலமைச்சர் பழனிசாமி பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி ஆவணப்படம் வெளியிட்ட தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், மனோஜ், சயான் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேச அவர்களுக்கு தடை விதிக்கவும், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க கோரி முதலமைச்சர் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முதல்வர் குறித்து பேச 7 பேருக்கும் தடைவிதித்தும், வழக்கு குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்கக்கோரி பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு சுப்ரமணியன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மேத்யூ சாமுவேலின் மனு குறித்து முதல்வர் பழனிசாமி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜூலை 4 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

2018 TopTamilNews. All rights reserved.