• October
    16
    Wednesday

Main Area

Mainகொடநாடு கொலைகள், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அம்மா ஆட்சி என்ன ஆச்சு?!

அதிமுகவின் அம்மா ஆட்சி
அதிமுகவின் அம்மா ஆட்சி

தமிழகம் எப்போதும் காணாத மோசமான அரசியல் சூழலை இப்போது சந்தித்து வருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை, இவ்வளவு மோசமான சூழல் இருந்ததில்லை. அவர் மறைவுக்குப் பின் தமிழகம் முழுக்க பிரச்சனைகள், போராட்டங்கள் என தொடர்ந்து வருகிறது. அம்மா ஆட்சியை வழங்குவோம் என முதல்வர்  பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். இந்த அம்மா ஆட்சி என்ன ஆச்சுனு பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் அம்மா ஆட்சி மக்களுக்கு என்ன செய்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

கொடநாடு கொலைகள்

kodanaadu

ஜெயலலிதா மரணத்துக்கு பின் அவரது கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அதோடு தொடர்புடையவர்களின் மர்மான மரணங்களுக்கு பின்னணியில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என தெஹல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆவணங்களை வெளியிட்டார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட ஆவணங்களில், ஜெயலலிதா மறைந்த பின்னர் கொடநாடு மாளிகையில் காவலாளி ஓம்பகதூரைக் கட்டிப்போட்டு விட்டு கொள்ளையர் உள்ளே நுழைந்தனர். ஓம்பகதூர் மர்ம மரணம் அடைந்தார். பிறகு இந்தக் கொள்ளையில் தொடர்புடைய ஷயான் காரில் பயணம் செய்தபோது மர்மமான முறையில் ஏற்பட்ட விபத்தில் அவரது மனைவி வினுப்பிரியா, குழந்தை நீத்து ஆகியோர் உயிரிழந்தனர். ஷயான் மட்டும் காயங்களுடன் தப்பினார். அதன் பின்னர்  கண்காணிப்புக் கேமரா ஆபரேட்டர் தினேஷ்குமார் மர்மமாக உயிரிழந்தார். இதன் பிறகு ஜெயலலிதாவின் வாகன ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் கொல்லப்பட்டார். கொடநாடு மாளிகை கொள்ளையில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் நபர்கள் ஒருவர் பின் ஒருவராக மர்ம மரணத்தைத் தழுவியதும், ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் திட்டமிட்ட படுகொலைகள், இந்த சம்பவங்களுக்கு பின்னணியில் எடப்பாடி பழனிசாமிக்கு சம்பந்தம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

கொடநாடு கொள்ளைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என கூலாக தெரிவித்துவிட்டு முதல்வர் பதவியில் நீடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி, இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. 


ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு

thoothukudi

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள், தாங்கள் சுவாசிக்கும் காற்றிலும், குடிநீரிலும் ஆலையின் நச்சுக் கழிவுகள் கலப்பதால் அதனை மூடச் சொல்லி போராட்டம் நடத்தினர். மக்களால் அமைதியான முறையில் நடத்தப்பட்ட இந்த போராட்டம் கலவரமாக மாறியது. 2018, மே 22-ஆம் தேதி நடைபெற்ற கலவரத்தில் காவல்துறையினரால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பலியானவர்களின் உடற்கூறாய்வு அறிக்கைகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

shoot

பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் தலை மற்றும் மார்பு பகுதியில் சுடப்பட்டுள்ளனர். அதேபோல் சந்தேகத்திற்குரிய வகையில் சிலர் கொடூரமாக தாக்கப்பட்டும் இறந்திருக்கிறார்கள். தலையில் சுடுப்பட்டு மூளை சிதறிய சம்பவமும் நடந்திருக்கிறது. பொதுமக்கள் போராட்டத்தின் போது கலவரம் நேர்ந்தால் பின்பற்றக் கூடிய எந்த வழிமுறைகளையும் காவல்துறை பின்பற்றவில்லை. தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைப்பது, ரப்பர் குண்டுகளால் சுடுவது என மக்கள் கூட்டத்தை கலைக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளது. இவை எதையுமே பின்பற்றாமல் நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது காவல்துறை, வேதாந்தா நிறுவனத்திடம் முதல்வர் பழனிசாமி பணம் வாங்கிவிட்டு மக்களை வதைக்கிறார் என சமூக ஆர்வலர்களை இதனை விமர்சித்தனர். இந்த கொலைகள் பற்றியும் பழனிசாமி அரசாங்கத்திடம் பதிலில்லை.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை என ஆவணப்படம் வெளியிட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலனையும் கடந்த 20 நாட்களாக காணவில்லை.


பொள்ளாச்சி பாலியல் விவகாரம்

rape

270-க்கும் அதிகமான பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதனை படமாக்கி காசு பறித்த கும்பலின் பின்னணியில் அதிமுக பிரமுகர்கள் இருப்பதாக தகவல் வெளியானது. தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் பார் நாகராஜன் உல்லாசமாக வெளியே சுற்றித் திரிகிறான். பார் நாகராஜன் அதிமுகவில் பதவியில் இருந்தவன், இந்த பிரச்சனைக்கு பிறகு அவன் பதவி நீக்கம் செய்யப்பட்டது எல்லாம் கண்துடைப்பு போல் உள்ளது. குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்களை விட பார் நாகராஜன் மீது அரசாங்கத்துக்கு தனி அக்கறை போல, அதனால் அவனுக்கு மட்டும் பெயில் வழங்கிவிட்டார்கள். அதுமட்டுமல்லாது இதில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் சம்பந்தம் உள்ளதென தகவல்கள் வெளியானது.

pollachi admk

இதில் காவல்துறையின் செயல்பாடுகள் மெத்தனப்போக்காக இருப்பதை பார்த்தால், ஆளும்கட்சியின் தலையீடு நிச்சயமாய் இருக்கும் என்பது போல்தான் உள்ளது. டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடத்திய பெண்ணை காதில் அறைந்து காது கேட்காமல் செய்த எஸ்பி பாண்டியராஜன் கையில் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர், ஒரு திருமணமான பெண்ணின் வீடியோ கிடைத்துள்ளது, அவர் புகார் அளித்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார். அதிமுக தரப்பு இதன் பின்னால் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்ட வேளையில், இந்த வழக்கில் எந்த அரசியல் அழுத்தமும் இல்லை என்று தெரிவித்தார். இவரது விசாரணையில் திருப்தி இல்லாத மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கு, இறுதியாக சிபிஐ கையில் வந்து நிற்கிறது. இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை, புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் முழு விபரத்தையும் வெளியிட்டு காவல்துறை தங்கள் கோர முகத்தை காட்டியிருக்கிறது. இனி எந்த பெண்ணும் புகார் அளிக்க முன்வரக்கூடாது என்ற நோக்கத்துடனே இதை செய்ததாக தெரிகிறது.

இந்த மூன்று சம்பவங்கள் மட்டுமல்லாது 8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் என பல்வேறு பிரச்சனைகளும், போராட்டங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. நம் மீது குண்டு மழை பொழியாததுதான் குறை, கிட்டத்தட்ட போர்க்களம் போலதான் இருக்கிறது தமிழகத்தின் நிலைமை.

jj

ஜெயலலிதா போட்டோவை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பாஜக ஆட்சியை வழங்குவதற்கு அம்மா ஆட்சி என பெயர் வைத்திருக்கிறது போல அதிமுக தரப்பு என பொது வெளியில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.