• February
    29
    Saturday

Main Area

Main



குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்கள் மன நலம் பாதித்தவர்கள்... பா.ஜ.க. தலைவர் கருத்து

பா.ஜ.க.
பா.ஜ.க.

மத்திய அரசு குடியரசு திருத்த சட்டத்தை கொண்டு வர போகிறது என்று தெரிந்தே உடனே நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்தது. மேலும், பல பகுதிகளில் நடந்த போராட்டம் வன்முறையாக  மாறி பல உயிர்களை காவு வாங்கியது. பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது. 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு

மாநில அரசுகள் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் காரணமாக வன்முறையாளர்கள் அடங்கினர். இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என உத்தர பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா தெரிவித்தார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது மவுரியா கூறியதாவது:

கேஷவ் பிரசாத் மவுரியா

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். அது போன்ற நபர்கள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. அதேவேளையில் அண்டை நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக நம் நாட்டுக்கு வந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.