• April
    06
    Monday

Main Area

Main



அவிநாசி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி- கேரள அரசு

tirupur road accident
tirupur road accident

திருப்பூர் அருகே அவினாசியில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த 19 பேரின் குடும்ம்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்துளார். 

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கேரள அரசின்  சொகுசு பேருந்து ஒன்று திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி அந்த பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 

tirupur road accident

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கேரள அரசு நிதியுதவி அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  முதற்கட்டமாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும், 2ம் கட்டமாக ரூ.8 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த அரசு பேருந்து ஊழியர்கள் பைஜூ, கிரீஷ் இருவருக்கும் தலா ரூ.30 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார்.
 

2018 TopTamilNews. All rights reserved.