• February
    17
    Monday

Main Area

Main



கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணி வரும் 19 ஆம் தேதி தொடக்கம்! 

keeladi
keeladi

கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணி வரும் 19 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2 மற்றும் 3 ஆம் கட்டமாக அகழாய்வு மேற்கொண்டனர். இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4 ஆம் கட்ட அகழாய்வை மேர்கொண்டது. இதைத்தொடர்ந்து 5 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஜூன் 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அகழாய்வு தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்றுவந்த பணி கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. இதுவரை தோண்டப்பட்ட 30 க்கும் மேற்பட்ட குழகளில் பண்டைகால அணிகலன்கள், மணிகள், பானை, ஓடுகள், குறியீடுகள், உறை கிணறுகள்,செப்புக்காசுக்கள், உணவு மற்றும் தண்ணீர் குவளைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

கீழடி

6-ம் கட்ட பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் 19 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாகவும், அதனை சென்னையிலிருந்து காணொலி மூலம்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தகவல் தெரிவித்துள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.