• February
    21
    Friday

Main Area

Main



சூடு பிடிக்கும் ஆட்டம்: கவினை நாமினேட் செய்த உயிர் நண்பர்கள்! 

கவின்- லாஸ்லியா- தர்ஷன்
கவின்- லாஸ்லியா- தர்ஷன்

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி 64 நாட்களை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து இதுவரை பாத்திமா பாபு,வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, அபிராமி, சரவணன்,மதுமிதா மற்றும் கஸ்தூரி ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

அதைத்தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஹவுஸ் மேட்ஸ்க்கு இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்ற விஷயம் தெரியாததால் வழக்கம் போல் நாமினேட் செய்கின்றனர். 

அந்த புரோமோவில், முகின், தர்ஷன்  மற்றும் சேரன் ஆகியோர் கவினை நாமினேட் செய்வது போல் வெளியாகியுள்ளது. எப்போதும் லாஸ்லியாவிடம் பேசுவது மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவது போன்ற செயல்களால் இவரை நாமினேட் செய்துள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.