• August
    26
    Monday

Main Area

Main



கர்நாடகாவில் ஆட்சி நிலைக்குமா? உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

Supreme court
Supreme court
Loading...

கர்நாடகாவில் ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் மற்றும் 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் தங்களது பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ராஜினாமா முடிவு குறித்து சபாநாயகர் தற்போது வரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். இதனால் அவர்களின் ராஜினாமாவை  சபாநாயகர் ஏற்க உத்தரவிடுமாறு கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில், அபிஷேக் மனு சிங்வி தலைமையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், சபாநாயகருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பது தான் சட்டமாக உள்ளது என கூறினார். இதனை தொடர்ந்து வாதிட்ட கர்நாடக முதல்வர் குமாரசாமி  தரப்பு வழக்கறிஞர் சபாநாயகர் எடுக்கும் முடிவு சட்டத்திற்குப் புறம்பானதாக இருக்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியுமே தவிர சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என வாதிட்டார். அனைத்து தரப்பினரின் வாதத்தை கேட்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கில் நாளை காலை பத்தரை மணிக்கு, தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவு பிறப்பித்தார். 

2018 TopTamilNews. All rights reserved.