• August
    21
    Wednesday

Main Area

Main



இவர்களெல்லாம் அத்திவரதரை தரிசிப்பதை தவிர்த்திடுங்கள்: மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்!

அத்தி வரதர்
அத்தி வரதர்
Loading...

காஞ்சிபுரம்: முதியோர், உடல்நலம் குன்றியோர், கர்ப்பிணிகள் ஆகியோர் அத்தி வரதரை தரிசிப்பதைத்  தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

athivaradhar

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரைத் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

athivaradhar

இதுவரை 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அத்தி வரதரைத் தரிசித்துள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

athivaradhar

இந்நிலையில், அத்தி வரதரைத் தரிசனம் செய்ய குறைந்தபட்சம் 4 மணி முதல் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை பிடிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் முதியோர்கள், உடல் நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் அவர்களை அழைத்து வருவோர் அத்தி வரதரைத் தரிசிப்பதைத்  தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

athivaradhar

40 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும்  இந்த நிகழ்வை வாழ்வில் ஒருமுறையேனும் கண்டுவிட வேண்டும் என்ற  எண்ணத்தின்  பிரதிபலிப்பே காஞ்சிசிபுரத்தை நோக்கி படையெடுக்கும் கட்டுக்கடங்காத மக்கள் பெருங்கூட்டம். அதற்கு முறையான ஏற்படும்,பாதுகாப்பும் கொடுக்க வேண்டிய அரசே பக்தர்களை வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது அரசின் கையாலாகாதத்தனத்தையே காட்டுகிறது.  

2018 TopTamilNews. All rights reserved.