• December
    12
    Thursday

Main Area

Main



வருமானவரித்துறை சம்மன் அனுப்பியதையடுத்து கல்கி பகவானின் மகன், மருமகள் மருத்துவமனையில் அனுமதி!

Kalki Group
Kalki Group

கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி பிரீத்தாவுக்கு வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. 

ஆந்திர மாநிலத்தில் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்திலும் அவரது மகன் என்.கே.வி கிருஷ்ணாவிற்குச் சம்பந்தப்பட்ட சென்னை உள்ளிட்ட 40 இடங்களிலும் வருமான வரித்துறையினர் கடந்த 17 ஆம் தேதி முதல் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். 5 நாட்களாக நடந்து வந்த சோதனை இன்றோடு நிறைவடைந்த நிலையில், கல்கி பகவானும் அவரது மகனும் 800 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கல்கி பகவானின் இல்லத்தில் கணக்கில் வராத  20 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் மற்றும்  90 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

IT Raid

இதையடுத்து கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி பிரீத்தாவுக்கு வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.  நாளை காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் கிருஷ்ணாவும் அவரது மனைவி பிரீத்தாவும் பள்ளிக்கரணையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடல் நிலை பாதிப்புக்குள்ளானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.