• March
    31
    Tuesday

Main Area

Main



காஜல் அகர்வாலின் புது லுக்! மொசகல்லு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு...

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

பிரபல நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளில் பிசியாக நடித்துவருகிறார். இவர் நடித்த மொசகல்லு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 

விஷ்ணு மஞ்சுவுடன் இவர் தெலுங்கு படமான மொசகல்லு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காஜல்,  ''வணக்கம்! நல்லது மற்றும் கெட்டது என்பதை வாழ்க்கையில் ஏற்படும் சூழ்நிலைகள் தான் முடிவு செய்கின்றன. என்னுடையது எவ்வளது சிறந்தது என்பதை இந்த வருடம் கோடை விடுமுறைக்கு வரும் இந்த படத்தின் மூலம் நீங்களே முடிவு செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.  

 

 

ஜெஃப்ரி கீ சின் இயக்கியுள்ளமொசகல்லு படத்தில் சுனில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். காஜல் மற்றும் நடிகை ருஹானி சிங் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். உலகின் மிகப்பெரிய துறையான ஐடி துறையில் நடைபெறக்கூடிய மோசடிகளை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையின்போது இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.