• April
    07
    Tuesday

Main Area

Main



சினிமா நடிகர்களின் சம்பளம் வரைமுறைப்படுத்தப்படும் - கடம்பூர் ராஜூ

kadambur Raju
kadambur Raju

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்வது குறித்து தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர், செயலாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. 

KR

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ,  “தயாரிப்பாளர்கள் எடுக்கின்ற படங்களில் செலவு உள்ளிட்டவைகளின் வெளிப் படைத்தன்மை இருக்கும் பட்சத்தில், நடிகர்களின் சம்பள வரைமுறையும் அதில் இடம் பெற்று, எல்லாமே இறுதி வடிவம் பெற்று எல்லாமே சராசரியாகச் சரி செய்யப்படும் நிலை உருவாகும். நடிகர்களின் சம்பளங்களை வரைமுறைப்படுத்த தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து பேசி ஒருமித்த கருத்துடன் அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார். 

2018 TopTamilNews. All rights reserved.