• August
    21
    Wednesday

Main Area

Main



அர்ஜுன் ரெட்டியின் ரீமேக்கான 'கபீர் சிங்' படத்தின் ட்ரைலர் வெளியானது: குஷியில் ரசிகர்கள்

கபீர் சிங்
கபீர் சிங்
Loading...

சென்னை: ஹிந்தியில் உருவாகிவரும் 'கபீர் சிங்' படத்தின் ட்ரைலர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே இன்று வெளியாகியுள்ளது . 

விஜய் தேவர்கொண்ட நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட் அடித்த படம் 'அர்ஜுன் ரெட்டி'. இப்படம் தெலுங்கு திரைத்துறையிலே ஒரு வித்தியாசமான படைப்பாக பேசப்பட்டது.அதன் வித்தியாசம் கருதியே இந்த படத்தைப் பல பேர் ரீமேக் உரிமம் பெற்றனர்.அதில் ஒன்றாக இயக்குநர் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான படம் 'வர்மா' அப்படம் தயாரிப்பாளரை திருப்திப் படுத்தாத நிலையில் அப்படத்தை வேறு இயக்குநரை வைத்து  ரீ-சூட் செய்து  வருகின்றனர்.

kabir singh


இதேபோல் ஹிந்தியில் ஷாஹித் கபூர்,கைர அத்வானி உருவாகியுள்ள இப்படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய  சந்தீப் ரெட்டி வாங்காவே இயக்கி உள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் இன்று மதியம் 1 மணி அளவில் யூடூப்பில் வெளியாகி  1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் அர்ஜுன் ரெட்டி போலவே இயல்பாக இருக்கிறது என்று இயக்குநரையும்  ஷாஹித் கபூரையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.இப்படம் வருகிற ஜூன் 21ம் தேதி வெளியாக இருப்பது  குறிப்பிடத்தக்கது

2018 TopTamilNews. All rights reserved.