• August
    24
    Saturday

Main Area

jayalalithaa
ஜெயலலிதாவின் தி அயர்ன் லேடி படம் எப்போது? நித்யா மேனன் ஓபன் டாக்! 

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோகிக் பற்றி நித்யா மேனன் கூறியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க பெரும் போட்டி நிலவி வந்தது. அதில் இயக்குநர் பிரியதர்ஷினி 'தி அயர்ன் லேடி' என்ற பெயரில் நித்யா மேனனை வைத்து ஒருப் படமும், இயக்குநர் ஏ எல் விஜய் கங்கனா ரனாவத்தை நாயகியாக வைத்து தலைவி என்ற பெயரில் ஒருப் படமும் இயக்குவதாக அறிவித்தனர்.

படம் குறித்து அறிவிப்பு வெளியானதோடு சரி வேறு எந்த ஒரு அப்டேட்வும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் நித்யா மேனன் பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது தி அயர்ன் லேடி படம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. 

இது குறித்து அவர் பேசுகையில், 'தி அயர்ன் லேடி படத்திற்காக நடிகர்கள், படக்குழுவினர் நிறையத் தயாரிப்புகளில் ஈடுபட வேண்டும். இந்த படத்தை நாங்கள் மட்டும் பயன்படுத்திக்கொண்டு படம் செய்ய விரும்பவில்லை. எனவே, உடனடியாக படத்தைத் தொடங்க எங்களுக்கு விரும்பவில்லை. படம் தற்போது ப்ரீ-புரொடக்‌ஷன் நிலையில் உள்ளது. மிக விரைவில் படப்பிடிப்பைத் தொடங்குவோம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

Aarthi Sat, 08/03/2019 - 11:47
jayalalithaa The Iron Lady nithya menon நித்யா மேனன் சினிமா

English Title

nithya menon says about the iron lady

News Order

0

Ticker

0 ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்படும் ஓ.பி.எஸ்... ஆட்டம் காணும் அதிமுக..!

அதிமுகவில் கோஷ்டி பூசல் கொளுந்து விட்டு எரிகிறது. எந்த விஷயத்திலும் யாரும் சுயமாக முடிவெடுக்க முடியாத நிலை. இதனால் ஆளாளுக்கு நாட்டாமை செய்து வருகிறார்கள். ஆனாலும் அவர்களது பேச்சை கடைமட்டத் தொண்டர்கள் கூட மதிப்பதில்லை. eps

கட்சிக்கு தலைமை ஓ.பன்னீர்செல்வம் என்றாலும் ஜெயலலிதாவை போல அவரால் அதிகாரத்துடன் செயல்பட முடியவில்லை. முதல்வர் என்ற சர்வ அதிகாரம் எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பதால் அவரை கலந்தாலோசித்து தான் எந்த ஒரு முடிவையும் கட்சி ரீதியாக எடுக்க முடிகிறது. அதேபோல பழனிசாமியும் கட்சியில் சுயமாக செயல்பட முடியாது. ஓ.பிஎஸை ஆலோசித்து தான் வேட்பாளர் தேர்வு, நிர்வாகிகள் நியமனம் போன்ற விஷயங்களில் அவரால் முடிவெடுக்க முடியும். eps

இதனால், மாநில நிர்வாகிகள் பதவிகளில் இருவரது ஆதரவாளர்களும் உள்ளனர். மாவட்ட செயலர்களிலும், பொதுக்குழு உறுப்பினர்களிலும் இருவருக்கும் சமமான ஆதரவு இருக்கிறது. எனவே தான் துணை முதல்வர் பதவியிலிருந்து விலகி கட்சியின் பொதுச்செயலர் பதவியை ஓ.பி.எஸ் ஏற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.  

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல முதல்வர் பதவியை வைத்திருப்பவர் தான் கட்சித் தலைமை பதவியையும் வைத்திருக்க வேண்டும் என்பதால் இரு பதவிகளையும் ஓ.பி.எஸிடம் கொடுத்து விட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் அடம்பிடிக்கின்றனர். edappadi

இதற்கிடையே மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து கட்சியின் ஆட்சிமன்ற குழுவில் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக பா.ஜ.க மேலிடத்தில் ஓ.பி.எஸ் பேசியதாக பழனிசாமி தரப்பில் புகார் வாசிக்கிறது. எனவே ஒற்றை தலைமை என்ற விவகாரத்தை கிளப்பி ஓ.பி.எஸை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து வெளியேற்றும் சதி நடப்பதாக ஆளும்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Thijai Mon, 06/10/2019 - 07:59
edappadipalanisamy O Panneerselvam jayalalithaa admk எடப்பாடி பழனிசாமி தமிழகம்

English Title

Overall OPS is are allocated to the ADMK

News Order

0

Ticker

1 பொங்கலுக்கு மாம்பழம் கொடுத்தவர் ஜெயலலிதா! - உளறிக்கொட்டும் அமைச்சர் சீனிவாசன்

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பொங்கலுக்கு பச்சரிசி, மாம்பழம் வழங்கி மக்களின் நலனை காத்தார் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர்,   அம்மா மக்கள்  கழகம் இந்த தேர்தலில் டெபாசிட் இழந்துவிட்டால், கட்சியின் பதிவை ரத்து செய்துவிட்டு அரசியலைவிட்டே வெளியேற வேண்டும். அரசியல் ஆண்மை இருந்தால் அமமுகவினர் இந்த சவாலை ஏற்கவேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா,   பொங்கல் பரிசாக பச்சரிசி, மாம்பழம் போன்றவற்றை அளித்தார் எனக்கூறியதும் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. அதன்பின் சுதாரித்துக்கொண்ட அமைச்சர், பச்சரிசி மற்றும் வெல்லம் கொடுத்தார் என மாற்றி பேசினார். 

தினகரனுக்கும் தமிழ் நாட்டிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என கேள்வி எழுப்பிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அவர் என்ன பாரம்பரிய அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவரா இல்லை சுதந்திரத்திற்காக போராடினவரா என விமர்சித்தார். மேலும் ஸ்டாலினை முதல்வராக்க டிடிவி தினகரன் வேலை செய்து கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார். 
 

admin Thu, 05/09/2019 - 18:08
Minister Srivasan jayalalithaa Pongal Minister srinivasan தமிழகம்

English Title

Minister Srivasan press meet

News Order

0

Ticker

0 ஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கு தெரியுமா?

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, அவருக்கு சொந்தமான ரூ.900 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

chennai high court

அந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யக் கோரி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி, வருமான வரித்துறை துணை ஆணையர், ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை இன்று தாக்கல் செய்தார்.

அதில், கடந்த 2016-2017-ஆம் ஆண்டுக்கான வருமான வரித்துறை கணக்குப்படி ஜெயலலிதாவுக்கு ரூ.16.37 கோடி சொத்துக்கள் உள்ளதாகவும், வங்கியில் ரூ.10 கோடி இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1990-91 முதல் 2011-12-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதாவுக்கு ரூ10.12 கோடி செல்வ வரி பாக்கி உள்ளதாகவும், 2005-06 முதல் 2011-12-ஆம் ஆண்டு வரை ரூ.6.62 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Poes garden house

அத்துடன், ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீடு உள்பட அவரது 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கின் விசாரணை வருகிற ஜூன் மாதம் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிங்க

’அந்த ஆளு ஒரு சுயநலவாதி...’ அதிமுக தலைமைக்கெதிராக பொங்கியெழுந்த ஜெயலலிதா..!

smprabu Thu, 04/25/2019 - 13:58
jayalalithaa jayalalithaa properties High court ஜெயலலிதா (கோப்புப்படம்) தமிழகம்

English Title

Jayalalithaa properties details submitted in chennai high court

News Order

0

Ticker

0 ஊழல் செய்தால் விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன்: சீமான் விமர்சனம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஊழல் குறித்தும் தமிழக மருத்துவ வசதி குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேர்தலுக்கான பிரச்சார வேலைகளில் நாம் தமிழர் கட்சி முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பேசிய அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் குற்றம் செய்பவர்களை விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன் என பேசினார்.

seeman

மேலும் அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 70 நாட்கள் உயிரோடு இருந்த ஜெயலலிதாவை அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தால், 7 நாட்களில் இறந்திருப்பார் என விமர்சித்தார்.

jaya

சீமான் தொடர்ந்து தமிழக அரசாங்கத்தை விமர்சித்து வருகிறார். இந்தியாவில் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது மருத்துவத்தில் தமிழகம் நல்ல இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சீமான் தமிழக அரசாங்கத்தின் கல்வித்துறையையும், மருத்துவத்துறையையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். எனினும் பணம் படைத்த அரசியல்வாதிகள் அரசு மருத்துவமனைகளுக்கு செல்வதில்லை, அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதில்லை.

hospital tn

அரசாங்க அதிகாரிகளின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும், சிகிச்சைக்காக அவர்கள் அரசு மருத்துவமனையையே நாட வேண்டும் என்பதும் சீமானின் நீண்டகால முழக்கமாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சி பிரமுகர்கள் யாரும் காய்ச்சலுக்கு கூட அரசு மருத்துவமனை பக்கம் ஒதுங்குவதில்லை. பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கையற்று போக அரசு அதிகாரிகளின் இந்த போக்கும் ஒரு காரணம்.

இதையும் படிங்க: 

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி இதோ!

சிரஞ்சீவி குடும்பத்திற்கு மாப்பிளையாகும் விஜய் தேவரகொண்டா?

 

Arunpandiyan Tue, 03/26/2019 - 11:20
jayalalithaa seeman Lok Sabha Election TN Govt ஜெயலலிதா - சீமான் தேர்தல் களம்

English Title

I will kill the people who involved in corruption using poison injection: seeman

News Order

0

Ticker

0 தலைவி படத்தில் ஜெயலலிதாவாக களமிறங்குகிறார் கங்கனா ரனாவத் 

சென்னை: இயக்குநர் விஜய் இயக்கயவிருக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று சினிமாவாக எடுப்பது வழக்கமான ஒன்று ஆகிவிட்டது. சினிமா நடிகர் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் வரை அனைவரின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாகிறது. அவரது வாழ்க்கைக் கதையை ஏற்கனவே மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரியதர்ஷினி நித்யா மேனன் வைத்து படமாக்கப்பட்டு வருகிறது.

thalaivi

அதையடுத்து இயக்குநர் விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கவுள்ளதாகச் சமீபத்தில் அறிவித்திருந்தனர். தற்போது ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதைக்குறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், ' இந்தியாவின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை இயக்குவது மிகுந்த பொறுப்புணர்வு மட்டுமின்றி பெருமையானதும் கூட.அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தப் படம் இருக்கும். ஜெயலலிதாவாக,கங்கனா ரனாவத் நடிப்பது பெருமையான விஷயம்' என்று கூறியுள்ளார். 

Aarthi Sat, 03/23/2019 - 11:56
kangana ranaut jayalalithaa Jayalalithaa Biopic alvijay கங்கனா ரனாவத் -ஜெயலலிதா சினிமா

English Title

Kangana Ranaut to play Jayalalithaa in her next

News Order

0

Ticker

0 2 லட்சம் காரட் வைரம் வாங்கிய ஜெயலலிதா?! - சமூக வலைதளங்களில் விமர்சனம்

சூரத்: பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட வேளையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா +11 தர வைரங்களில் 2 லட்சம் காரட் வாங்கியதாக தகவல் என டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தி வைரலாகி வருகிறது.

பணமதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட வேளையில், ஜெயலலிதா 2 லட்சம் காரட் வைரங்களை மும்பை வைர மார்க்கெட்டில் வாங்கியதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா  மறைவுக்கு பின் அவரது நெருங்கிய உறவுகள் 1 லட்சம் காரட் வைரங்களை மும்பை மார்க்கெட்டில் விற்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. 

தமிழ்நாட்டில் இருந்து வைரங்கள் வந்து குவிவதால், +11 தர வைரங்களின் விலை 30% குறைந்துள்ளதாம். இந்நிலையில் இதனை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Arunpandiyan Sat, 03/09/2019 - 19:52
jayalalithaa surat +11 diamonds 2 lakhs carat diamond jayalalitha diamonds சூரத் வைரங்கள் - ஜெயலலிதா தமிழகம்

English Title

Jayalalitha buys 2 lakh carat +11 diamonds - Netizens criticize

News Order

0

Ticker

0 ரஜினிகாந்த்,ஜெயலலிதா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா  இல்லத்திற்கும் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொலைபேசி மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட மர்ம நபர் ரஜினி மற்றும் ஜெயலலிதா வீட்டில் சற்று நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட போலீசார், ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளில் சென்று வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால், எந்தவித வெடிபொருளும் சிக்கவில்லை. இது ஒரு பக்கம் நடக்க, மறுபுறம் மிரட்டல் விடுத்த போன்கால் பற்றி போலீசார் விசாரித்து வந்தனர். 

இதனிடையே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கோவையை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது. அவருடைய பெயர் முகமது அலி என்பதும், மன அழுத்தம் காரணமாக இவ்வாறு மிரட்டல் விடுத்து பேசியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Aarthi Wed, 03/06/2019 - 10:48
jayalalithaa rajinikanth bomb jayalalitha and rajinikanth சினிமா

English Title

bomb threatened to jayalalitha house and rajinikanth house

News Order

0

Ticker

0 ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இயக்கும் விஜய் 

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குநர் விஜய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குநர் விஜய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விப்ரி மீடியா நிறுவனம் தயாரிப்பில்  ‘தலைவி’ என்று பெயரிட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ரை ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து படக்குழு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “இந்த படம் ஜெயலலிதா அவர்களின் "அதிகாரப்பூர்வ" வாழ்க்கை வரலாற்றுப் படம் .ஏனெனில் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் தீபக் அவர்களிடம் இருந்து NOC- யை பெற்று இந்த படத்தை உருவாக்குகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் குறித்து இயக்குநர் விஜய் கூறுகையில்,"தலைவி  என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும் "தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்" என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது. ஜெயலலிதா அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர், அவர் பிறப்பிலேயே அத்தகைய தலைமைப் பண்புகளைப் பெற்றவர். அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, அனுபவம் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை ஒரு தலைவரை உருவாக்கும் குணங்கள் என்றால், அவர் பிறப்பிலேயே அந்த குணங்களைப் பெற்றவர். இத்தகைய உயர்ந்த தலைவரின் தைரியமே என்னை மிகவும் கவர்ந்தது.

அதனால் தான் இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தவுடனே எந்த யோசனையும் இல்லாமல் ஒப்புக் கொண்டேன். மிக நேர்மையான ஒரு வரலாற்றுப் படமாக இதை கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதற்காகக் கடுமையாக உழைத்து வருகிறேன். பாகுபலி எழுத்தாளர் திரு விஜயேந்திர பிரசாத் இந்த படத்தில் இணை கதாசிரியராக இணைகிறார் என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரின் பங்களிப்பு இந்த படத்துக்குக் கூடுதல் மதிப்பை சேர்க்கும். மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும்" என்று கூறியுள்ளார். மேலும் இப்படத்தை தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aarthi Sun, 02/24/2019 - 17:35
jayalalithaa AMMA Jayalalithaa Biopic thalaivi alvijay தலைவி சினிமா

English Title

jayalalitha biopic to be taken by vijay

News Order

0 ஜெ.,மரண விசாரணையை முடிக்க போகிறோம்: உயர் நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி தகவல்

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை முடியும் தருவாயில் உள்ளது என்று ஆறுமுகசாமி ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அப்போலோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.அதில் கூறப்பட்டிருந்ததாவது: ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டதற்கான சூழ்நிலை, வழங்கப்பட்ட சிகிச்சை, மரணத்திற்கான காரணம் ஆகியவற்றை கண்டறிய ஆணையம் அமைக்கப் பட்டது.

jayalalithaa

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆணையம் விசாரிக்கிறது. ஆனால் தங்கள் தரப்பில் ஆஜராகும் மருத்துவர்களின் விளக்கத்தை பதிவு செய்துகொள்ள, 21 துறைகளை சார்ந்த மருத்துவர்களைக் கொண்ட குழுவை அமைக்க கோரி தாக்கல் செய்த மனுவை ஆணையம் நிராகரித்துவிட்டது.

எனவே, அப்போலோ அளித்த சிகிச்சை தொடர்பாக விசாரணை நடத்த தன்னிச்சையாக செயல்படக்கூடிய மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும். அதுவரை சிகிச்சை தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

jayalalithaa

இந்த வழக்கு நீதிபதி சுப்பையா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆறுமுகசாமி ஆணையம் தரப்பானது, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை முடியும் தருவாயில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையத்தின் விசாரணையை தடுக்க வழக்கு தொடரப் பட்டு உள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க அதிகாரம் உள்ளது.

jayalalithaa

2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி முதல் டிசம்பர் 5 வரை அப்போலோ மருத்துவ மனையில் நடைபெற்ற அனைத்தையும் விசாரிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இருக்கிறது. மருத்துவ வார்த்தைகள் தவறாக குறிப்பிட்டு உள்ளதாக கூறப்பட்டு இருப்பது தவறு. நியாயமான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

jayalalithaa

விசாரணையின் போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை தரப்பில் கேட்கப்பட்டது. இதையடுத்து,இந்த வழக்கின் விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

smprabu Fri, 02/15/2019 - 13:12
jayalalithaa Arumugasamy Commission High court jayalalithaaarumugasamy தமிழகம்

English Title

We are going to finish jayalalithaa dead probe

News Order

0 
jayalalithaa

நீங்களே சொல்லுங்க பாஸ்! ஜெயலலிதா கிரிமினலா இல்லையா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு கிரிமினலா இல்லையா என்ற குழப்பத்தை சென்னை உயர் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு மக்கள் மண்டையைக் காயவைத்து விட்டது


badar syed

காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமான ஜெயலலிதாவின் பள்ளித் தோழி

ஜெயலலிதாவின் பள்ளித் தோழி பதர் சையத் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். 


admk

வருமான வரி பாக்கி: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை முடக்கியது ஐ.டி!

வருமான வரி செலத்தப்படாமல் இருப்பதால் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


jayalalithaamemorial

ஜெயலலிதா நினைவிடம் அமைக்கக் தடை இல்லை-உயர் நீதிமன்றம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுmodi

எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றுகிறார் மோடி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவுகளை பிரதமர் மோடி தற்போது நிறைவேற்றி வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார். 


kodanad

கொடநாடு மர்ம மரணங்கள்: வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு

கொடுநாடு எஸ்டேட் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் அடுத்தடுத்த மரணங்களுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பிருப்பதாக வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மீது சென்னை போலீஸ் வழக்கு...


kodanad

கோடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி?: அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

கோடநாடு எஸ்டேட்டில் அரங்கேறிய மர்ம  மரணங்களுக்குப் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறுவது கற்பனையானது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


kodanad

கோடநாடு மர்ம மரணங்களுக்கு பின்னணியில் ஈபிஎஸ்? பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

கோடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரம் மரணங்களுக்கு பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


ops

ஜெயலலிதா மரண விசாரணை: நேரில் ஆஜராக ஓபிஎஸ்.க்கு ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகுமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.