kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


ஒய்.எஸ்.ஆரின் சகோதரர் கொலை; சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு!

ஜெகன் மோகன் ரெட்டி (கோப்புப்படம்)
ஜெகன் மோகன் ரெட்டி (கோப்புப்படம்)
Loading...

அமராவதி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சகோதரர், விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆந்திர முதல்வர் மீது ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சகோதரர், ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி. முன்னாள் எம்.பி.,-யான இவர், கடப்பா மாவட்டம் புலிவெந்தலாவில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த போது, மர்ம நபர்களால் நேற்று கொலை செய்யப்பட்டார்.

வீட்டின் கழிவறையில் தலை, முகம் ஆகிய பகுதிகளில் பலத்த காயங்களுடன் கிடந்த அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அதில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானாது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தனது சித்தப்பா மரணம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் என குடும்பத்தில் கொலை நடக்கிறது என குறிப்பிட்ட அவர், தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்த போது, எனது தாத்தா ஒய்.எஸ்.ராஜா ரெட்டி கொலை செய்யப்பட்டார். எனது தந்தை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர், நீங்கள் திரும்ப மாட்டீர்கள் என சந்திரபாபு நாயுடு கூறினார். அக்கட்சி ஆட்சியில் இருந்த போது தான் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் என்னை கொலை செய்ய முயற்சிகள் நடந்தது. என தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி, இந்த கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார்.

அதேசமயம், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சந்திரபாபு நாயுடு, உங்களது வீட்டில் கொலை நடந்துள்ள போது எங்கள் மீது குற்றம் சாட்டுவதில் என்ன நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும். கூடிய விரைவில் உண்மை வெளி வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் நடைபெற இடத்துக்கு போலீசார் செல்வதற்கு முன்பே அங்கிருந்த ரத்தகறைகளை நீக்கியுள்ளனர் என சுட்டிக் காட்டிய நாயுடு, இதனை இயற்கை மரணமாகவே சித்தரிக்க அவர்களது குடும்பத்தினர் முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளது. பிரேதப்பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.