darbar
  • January
    28
    Tuesday

Main Area

Main



இரும்பு சத்துக்கள் நிறைந்த சிவப்பரிசி உப்புமா!

சிவப்பரிசி உப்புமா
சிவப்பரிசி உப்புமா

தேவையான பொருட்கள்
சிவப்பரிசி -100கி
சின்ன வெங்காயம் -10
பச்சை மிளகாய் -2
தேங்காய் துருவல் - 2டேபிள்ஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை -10 இலைகள்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

sivapu arasi

செய்முறை
சிவப்பரிசியை ரவை பதத்தில் உடைத்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு தாளித்து ,பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். ஊறவைத்த சிவப்பரிசி ரவையைச் சேர்த்து உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வேக விட வேண்டும். 10 நிமிடத்தில் வெந்து விடும். அதன் பிறகு தேங்காய் துருவல் தூவி நன்றாக கிளறிப் பரிமாறலாம். சிவப்பரிசியில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.