• August
    21
    Wednesday

Main Area

Main



ஐபிஎல் போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்பத் தடை

ipl
ipl
Loading...

இந்தியா பாகிஸ்தான் இரண்டும் எதிரி நாடுகள் என்பது உலகறிந்த விஷயம். எந்தளவுக்கு எதிரி என்றால் விளையாட்டைக் கூட ராணுவப் போராக நினைக்கும் அளவிற்கு எதிரி.

பாகிஸ்தான் வீரர்களுடன் போட்டி இல்லை 

பாகிஸ்தான் அரசின் தீவிரவாதத்தை ஆதரிக்கும் போக்கை கண்டித்து இந்தியா பாகிஸ்தானுடன் நேரடியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்த்து வருகிறது. ஆசியக் கோப்பை போட்டிகள் மற்றும் உலகக் கோப்பை போட்டிகளில் மட்டுமே இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதும். 

இந்தியாவில் முதலில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய போது வெளிநாட்டு வீரர்களாக பாகிஸ்தான் வீரர்களும் ஐபிஎல் அணிகளில் இடம் பெற்றனர். ஆனால், ஒரே வருடம் தான் விளையாடினர். 2008 - ஆம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுப்பதை ஐபிஎல் அணிகள் தவிர்த்து விட்டன. இது பாகிஸ்தானுக்கு மிகுந்த வருத்தமான விஷயம். ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் போதும் ஆதங்கத்தை ஏதேனும் ஒரு விதத்தில் பாகிஸ்தான் வெளிப்படுத்தும்.

ipl
ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பத் தடை 

இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளின் முதல் ஆட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோத உள்ளது.

இதையடுத்து பாகிஸ்தான் அரசு ஐபிஎல் போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஃபவத் அகமது சவுத்ரி, 'ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவின் நடவடிக்கைகளே முழுக் காரணம் ஆகும். இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடி கிரிக்கெட்டை அரசியல் ஆக்கி உள்ளனர்.

ipl pak

இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது. பாகிஸ்தான் உள்ளூர் டி 20 கிரிக்கெட் போட்டியான பி.எஸ்.எல் போட்டிகள் இந்தியாவில் ஒளிபரப்பவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக பாகிஸ்தான் அரசு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது' என தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.