• November
    22
    Friday

Main Area

Main



திருமணமான அன்றே தாலியை கழட்டி எறிந்துவிட்டு காதலனை மணந்த இளம்பெண்: திருவண்ணாமலையில் பரபரப்பு !

திருமணம்
திருமணம்

திருவண்ணாமலை: பெண் ஒருவர் கட்டாய தாலியை அறுத்து எரிந்துவிட்டு  காதலனுடன் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று திருவண்ணாமலையில் அரங்கேறியுள்ளது. 

love

திருவண்ணாமலை மாவட்டம், கொடையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு பூங்காவனம் என்ற மனைவியும் குமார் என்ற மகனும் உள்ளனர். குமார் அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.  இவர்களின் காதலுக்கு  எதிர்ப்பு தெரிவித்த ஈஸ்வரியின் பெற்றோர், கடந்த 6ம் தேதி அவருக்கு அவசர அவசரமாக வேறு ஒருவருடன் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். 

marriage

இதையடுத்து கட்டாய திருமணத்தை எதிர்த்த ஈஸ்வரி திருமணமான அன்றே கட்டாய தாலியை அறுத்து எரிந்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் காதலன் குமாரை ஆரணியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு சென்னைக்குக் குடியேறியுள்ளார். 

இதைத்தொடர்ந்து ஈஸ்வரி - குமார் தம்பதி  சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் குமாரின் குடும்பத்திற்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பதாகவும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் 
 கிராமத்தினர் கூறியதாக மீது குமாரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் கிராமத்தினர் ஊருக்குள் செல்ல விதித்துள்ள தடையை நீக்கவும், எங்கள் உயிர் மற்றும் உடைமைகளுக்குப்  பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஈஸ்வரி - குமார் தம்பதி   திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.