• March
    31
    Tuesday

Main Area

Main



இந்தியன்-2 விபத்து; கிரேன் இயக்கிய நபர் கைது

Indian2Accident
Indian2Accident

விப‌த்து நிகழ்ந்த இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் இயக்கிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விபத்து தொடர்பாக கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், காஜல் அகர்பால் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது. 

இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் ஏ‌ற்பட்ட கொடூர விபத்து தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளா‌க்கியது. சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றும் குமார் என்பவர் நரசதப்பேட்டை காவல்நிலையத்தில் லைகா நிறுவனம் மீது புகார் அளித்தார். அதில்,  தயாரிப்பு நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும், கிரேன் ஆபரேட்டர் அஜாக்கிரதையாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். புகாரின் அடிப்படையில் நசரத்பேட்டை காவல்துறையினர் கிரேன் ஆபரேட்டர் ராஜன், தயாரிப்பு மேலாளர் சுந்தர்ராஜன் மற்றும் விபத்தில் தொடர்புடையவர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு ‌செய்தனர். இந்நிலையில் சென்னையில் தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Indian2Accident

இதனிடையே, இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த உணவு சப்ளையர் சந்திரனுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தென்னிந்திய திரைப்பட தொழி‌லாளர்கள் சம்மேளனம் சென்னையில் கூட்டம் நடத்தியது. பாதுகாப்பை உறுதி செய்யும் படப்பிடிப்புகளில் மட்டுமே தொழிலாளர்கள் பணியாற்ற இனி ஒப்பந்தம் செய்யப்படும் என இரங்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சந்திரனுடைய மகளின் கல்விச்செலவு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், அவரது குடும்பத்துக்கு தொழிலாளர் குடியிருப்பில் இலவசமாக வீடு வழங்கப்படும் என்றும் ஃபெப்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதனால் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், நடிகை காஜல் அகர்வால் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது. இதனிடையே விபத்து தொடர்பான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

#Indian2Accident

வழக்கறிஞர் ராஜசேகரன் என்பவர் கொடுத்துள்ள புகாரில், இந்தியன் 2 படத்தின் இயக்குநர் ஷங்கர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கிரேன் ஆப்ரேட்டரை கைது செய்வதை விடுத்து, தயாரிப்பு நிறுவனமான லைக்கா பொறுப்பாளர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

2018 TopTamilNews. All rights reserved.