• April
    09
    Thursday

Main Area

Main



இந்தியன் 2 விபத்துக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்: கமலுக்கு லைகா நிறுவனம் பதில் கடிதம்!

இந்தியன் 2
இந்தியன் 2

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அருகே உள்ள நாசரத்பேட்டை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 பேர் கிரேன்  அறுந்து விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.  படப்பிடிப்பு தளத்தில், ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று அறுந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டது. இதில்  கிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.  இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுதொடர்பாக கிரேன்  ஆபரேட்டர் கைது  செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  

 

ttn

அதேபோல் படத்தின்  தயாரிப்பாளரான லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக படத்தின் இணை இயக்குநர் குமார் அளித்த புகாரின் பேரில் நசரத்பேட்டை போலீசார் அஜாக்கிரதையாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

ttn

இதை தொடர்ந்து நடிகர் கமல் ஹாசன் லைகா  நிறுவனத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ' உங்கள் படத்தில் பணிபுரியும் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் இனிமேல் பாதுகாப்பு ஏற்பாடுகளை  உறுதி செய்த பிறகு படப்பிடிப்பைத் துவங்க வேண்டும்' என்றும் கூறியிருந்தார். மேலும்  விபத்து ஏற்படும் பட்சத்தில் அதற்கான முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளோடு லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல் எழுதிய  அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

ttn
இந்நிலையில் கமல்ஹாசனின் கடிதத்திற்குப் பதிலளித்துள்ள லைகா நிறுவனம், 'விபத்தில் பலியானவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்தோம்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 2 கோடி இழப்பீடு என இதில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் உங்கள் கடிதம் கிடைப்பதற்கு முன்பாகவே உதவிகள் செய்தோம்.

ttn

 அனுபவம் வாய்ந்த தலைசிறந்த கலைஞர்களான கமல், ஷங்கரின் படப்பிடிப்பில் எந்த பாதுகாப்பு  குறைபாடும் இருக்காது என்று நம்பினோம். இருப்பினும் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு விட்டது. இதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அத்துடன்  படப்பிடிப்பு தளத்தில் உரிய பாதுகாப்பு அளிக்கும் நோக்கில்,  படத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும்  தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.