• November
    19
    Tuesday

Main Area

Main



இரட்டை சதம் அடித்து.. தென்னாபிரிக்காவை அதிரவைத்த ரோகித் சர்மா!

Rohit
Rohit

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார் துவக்க வீரர் ரோஹித் சர்மா.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.  துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் களம் கண்டனர். 

 

இதில் மயங்க் அகர்வால் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் விராத் கோலி 12 ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மிகவும் தடுமாறியது. 

4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் ரஹானே இருவரும் நிலைத்து நின்று ஆடி இந்திய அணிக்கு ரன் குவிப்பில் ஈடுபட்டனர். முதல் நாளில் 58 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்தது.


இரண்டாம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது. இதில் சதம் அடித்திருந்த ரோகித் சர்மா மீண்டும் தனது அதிரடியை தொடர்ந்தார். மறுமுனையில் இவருக்கு பக்கபலமாக இருந்த ரகானே சதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 267 ரன்கள் குவித்த நிலையில் ரகானே 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இருப்பினும், நிலைத்து ஆடிய ரோகித் சர்மா டெஸ்ட் அரங்கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். இவர் 212 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 28 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடங்கும். 

உணவு இடைவேளைக்கு பிறகு, இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.